இன்றைய ராசிபலன் 25.05.2019 சனிக்கிழமை வைகாசி (11) | Today rasi palan

பஞ்சாங்கம்

Saturday, May 25, 2019
விகாரி – 2019
வைகாசி – 11  
சனிக்கிழமை
 • சூரியோதயம் — 5:45 am
 • சூரியஸ்தமம் — 6:26 pm
 • அயனம் — உத்தராயணம்
திதி

 1. கிருஷ்ண பக்ஷ சஷ்டி — May 24 04:18 AM – May 25 06:25 AM
 2. கிருஷ்ண பக்ஷ சப்தமி — May 25 06:25 AM – May 26 08:49 AM
நட்சத்திரம்

 1. திருவோணம் — May 24 07:30 AM – May 25 10:15 AM
 2. அவிட்டம் — May 25 10:15 AM – May 26 01:14 PM
கரணம்

 1. வனசை — May 24 05:19 PM – May 25 06:25 AM
 2. பத்திரை — May 25 06:25 AM – May 25 07:36 PM
 3. பவம் — May 25 07:36 PM – May 26 08:49 AM
யோகம்

 1. பராம்யம்— May 24 10:15 AM – May 25 11:01 AM
 2. மாஹேந்த்ரம்— May 25 11:01 AM – May 26 11:59 AM
 • சந்திரௌதயம்— May 26 12:02 AM
 • சந்திராஸ்தமனம்— May 26 11:54 AM
அசுபமான காலம்

 • இராகு— 8:55 AM – 10:30 AM
 • எமகண்டம்— 1:40 PM – 3:16 PM
 • குளிகை— 5:45 AM – 7:20 AM
 • துரமுஹுர்த்தம்
  1. 07:26 AM – 08:17 AM
 • தியாஜ்யம்
  1. 14:45 PM – 16:33 PM
சுபமான காலம்

அபிஜித் காலம் 11:40 AM – 12:31 PM
அமிர்த காலம்
 1. 01:31 – 03:19
Brahma Muhurat 04:09 AM – 04:57 AM
ஆனந்ததி யோகம்

 1. sthira Upto – May 25 10:15 AM
 2. vrudhhi
சூர்யா ராசி

 1. ரிஷபம்
சந்திர ராசி

 1. மகரம் Upto – May 25 11:43 PM
 2. கும்பம்
சந்திர மாதம்

 • அமாந்த — வைசாகம்
 • பூர்ணிமாந்த — ஜ்யேஷ்டம்
 • Saka — ஜ்யேஷ்டம் 4, 1941
 • Vedic Ritu— Vasant (Spring)
 • Drik Ritu— Grishma (Summer)
 • Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga

 1. Amrutha Upto – May 25 10:15 AM
 2. ஸித்தம்
Chandrashtama 

 1. 1. Mrigashirsha Last 2 padam, Ardra , Punarvasu First 3 padam
Others

 • Agnivasa —
  1. Akasha (Heaven) upto 25 – 06:25 Patala (Nadir)
 • Chandra Vasa —
  1. South upto 25 – 23:43 West
 • Disha Shool — east
 • Rahukala Vasa — east
வாரசூலை

 1. சூலம் — கிழக்கு
 2. பரிகாரம் — தயிர்

மேஷம்

மேஷம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப்போகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்…

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*

*வாட்சப் ல் இணைய*

📲 +919486053609

⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!