இன்றைய ராசிபலன் 25.06.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 10 | Today rasi palan

*🚩🕉ஶ்ரீராமஜெயம்.🕉🚩*

*பஞ்சாங்கம் ~ ஆனி ~ *10*
*{25.06.2019}* *செவ்வாய்கிழமை.*
*வருடம்*~ விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ *உத்தராயணம்*.
*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.
*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)
*பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*
*திதி ~ அஷ்டமி.*
*ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி.*
*நாள்* ~ செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் } ~~~~~~~~~~~~ *நக்ஷத்திரம்*~ உத்திரட்டாதி .
*யோகம்*~ அமிர்த, சித்த யோகம்.
*கரணம்* ~ பாலவம் , கௌலவம் .
*நல்ல நேரம்*~ காலை 07.30 AM ~ 08.30 AM & 04.30PM ~ 05.30 PM .
*ராகு காலம்*~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM .
*எமகண்டம்*~ காலை 09.00 AM ~10.30 AM.
*குளிகை* ~ 12.00 NOON ~ 01.30 PM.
*சூரிய உதயம்*~ காலை 05.55 AM.
*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.35 PM.
*சந்திராஷ்டமம்*~ உத்திரம்.
*சூலம்*~ வடக்கு .
*பரிகாரம்*~ பால் .
*இன்று ~ * 🙏🙏
*🚩🕉SRI RAMAJEYAM🕉🚩*

*PANCHCHAANGAM* ~ *AANI*~ *10 (25.06.2019)* ~ *TUESDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM { VIKAARI NAMA SAMVATHSARAM}
*AYANAM ~ UTHTHARAAYANAM*.
*RUTHU:*~ GREESHMA RUTHU.
*MONTH ~ AANI (MITHUNA MAASAM)*
*PAKSHAM* ~ KRISHNA PAKSHAM.
*THITHI* ~ ASHTAMI.
*SRAARTHTHA THTHI ~ ASHTAMI*
*DAY*~ TUESDAY( POUMA VAASARAM)
*NAKSHATHRAM ~ UTHTHIRATTAADHI .*
*YOGAM*~ AMIRDHA, SIDHDHA YOGAM .
*KARANAM* ~ *BAALAVAM,KAULAVAM.*
*RAGU KALAM*~03.00 PM~04.30PM.
*YEMAGANDAM*~09.00 ~10.30 AM.
*KULIGAI*~12.00 PM ~ 01.30 PM.
*GOOD TIME*~ 07.30 AM TO 08.30 AM & 04.30 PM ~ 05.30 PM.
*SUN RISE* ~ 05.55 AM.
*SUN SET ~ 06.35. PM*
*CHANTHRASHTAMAM* ~ UTHTHIRAM.
*SOOLAM* ~ NORTH .
*Parigaram* ~ MILK .
*TODAY*~ **🙏🙏🙏🙏

இன்றைய ராசிபலன்கள்….

மேஷம்

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும் உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத் துவம் தருவார்கள்.

மிதுனம்

மிதுனம்: அனுபவபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.

கடகம்

கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.

சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் தொடங் குவதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். உடல் நலம் பாதிக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக்கூறுவார்.

கன்னி

கன்னி: உங்களின் பலம், பலவீனத்தை உணருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

விருச்சிகம்

விருச்சிகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்த னையை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

தனுசு

தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடை வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்

மகரம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.

மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல்கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!