இன்றைய ராசிபலன் 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைகாசி (12) | Today rasi palan

Sunday, May 26, 2019
விகாரி – 2019
வைகாசி – 12  
ஞாயிற்றுக்கிழமை
  • சூரியோதயம் — 5:45 am
  • சூரியஸ்தமம் — 6:26 pm
  • அயனம் — உத்தராயணம்
திதி

  1. கிருஷ்ண பக்ஷ சப்தமி — May 25 06:25 AM – May 26 08:49 AM
  2. கிருஷ்ண பக்ஷ அஷ்டமி — May 26 08:49 AM – May 27 11:16 AM
நட்சத்திரம்

  1. அவிட்டம் — May 25 10:15 AM – May 26 01:14 PM
  2. சதயம் — May 26 01:14 PM – May 27 04:13 PM
கரணம்

  1. பவம் — May 25 07:36 PM – May 26 08:49 AM
  2. பாலவம் — May 26 08:49 AM – May 26 10:03 PM
  3. கௌலவம் — May 26 10:03 PM – May 27 11:16 AM
யோகம்

  1. மாஹேந்த்ரம்— May 25 11:01 AM – May 26 11:59 AM
  2. வைத்ருதி— May 26 11:59 AM – May 27 12:57 PM
  • சந்திரௌதயம்— May 26 12:02 AM
  • சந்திராஸ்தமனம்— May 27 12:41 PM
அசுபமான காலம்

  • இராகு— 4:51 PM – 6:26 PM
  • எமகண்டம்— 12:05 PM – 1:41 PM
  • குளிகை— 3:16 PM – 4:51 PM
  • துரமுஹுர்த்தம்
    1. 04:44 PM – 05:35 PM
  • தியாஜ்யம்
    1. 21:20 PM – 23:08 PM
சுபமான காலம்

அபிஜித் காலம் 11:40 AM – 12:31 PM
அமிர்த காலம்
  1. None
Brahma Muhurat 04:08 AM – 04:56 AM
ஆனந்ததி யோகம்

  1. matanga Upto – May 26 01:14 PM
  2. rakshasa
சூர்யா ராசி

  1. ரிஷபம்
சந்திர ராசி

  1. கும்பம்
சந்திர மாதம்

  • அமாந்த — வைசாகம்
  • பூர்ணிமாந்த — ஜ்யேஷ்டம்
  • Saka — ஜ்யேஷ்டம் 5, 1941
  • Vedic Ritu— Vasant (Spring)
  • Drik Ritu— Grishma (Summer)
  • Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga

  1. Amrutha Upto – May 26 01:14 PM
  2. Marana
Chandrashtama 

  1. 1. Punarvasu Last 1 padam, Pushya , Ashlesha
Others

  • Agnivasa —
    1. Prithvi (Earth) upto 26 – 08:49 Akasha (Heaven)
  • Chandra Vasa — மேற்கு
  • Disha Shool — west
  • Rahukala Vasa — north
வாரசூலை

  1. சூலம் — மேற்கு
  2. பரிகாரம் — வெல்லம்
Auspicious Yogas

  1. Dwipushkar — May 26 05:45 AM – May 26 08:49 AM

மேஷம்

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

ரிஷபம்

ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டிவரும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.

சிம்மம்

சிம்மம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

துலாம்

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக உங்களுக்குள் இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர் கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்…

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*

*வாட்சப் ல் இணைய*

📲 +919486053609

⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!