Daily Raasi Palan

இன்றைய ராசிபலன் 11/27/2018 கார்த்திகை 11 செவ்வாய்கிழமை | Today rasi palan 11/27/2018

Guru Peyarchi Predictions 2017

இன்றைய ராசிபலன் 11/27/2018 கார்த்திகை 11 செவ்வாய்கிழமை | Today rasi palan 11/27/2018

இன்றைய ராசிபலன்கள் (27.11.2018)

மேஷம் :

மனை சம்பந்தமான தொழில் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வாகனப் பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். தாயின் ஆதரவால் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அசுவினி : முயற்சிகள் ஈடேறும்.
பரணி : பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
கிருத்திகை : நினைவாற்றல் மேலோங்கும்.

ரிஷபம் :

வெளிவட்டாரங்களில் உங்களின் மரியாதை உயரும். இளைய சகோதரர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மதிப்பு உயரும்.
ரோகிணி : புதிய யுக்திகளை கற்பீர்கள்.
மிருகசீரிடம் : மாற்றங்கள் ஏற்படும்.

மிதுனம் :

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். பேச்சில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிடம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.

கடகம் :

புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். போட்டிகளில் இலாபம் அடைவீர்கள். பங்காளிகளுக்கு இடையேயான உறவுநிலை மேம்படும். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். நினைவாற்றல் மேலோங்கும். பழைய நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.
பூசம் : உறவுநிலை மேம்படும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம் :

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சபைகளில் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துகளில் இடர்பாடுகள் தோன்றி மறையும். வெளிநாட்டு முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாட்டால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : ஆதரவு பெருகும்.
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.

கன்னி :

ஆபரணச் சேர்க்கை உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். பூமியை விருத்தி செய்வதற்கு சாதகமான சூழல் அமையும். புதுமையான யுக்திகளை கையாளுவீர்கள். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : திடீர் யோகம் கிடைக்கும்.
அஸ்தம் : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் :

இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும். சங்கீத இசைக் கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். இணையதள வேலை வாய்ப்புகளினால் மேன்மை உண்டாகும். மனைகளில் வீடு கட்டும் பணிகளை தொடங்குவீர்கள். மனக்கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : சுப விரயம் உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.

விருச்சகம் :

காது சம்பந்தமான உபாதைகள் சரியாகும். புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். சக பணியாளர்களால் தொழிலில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : புகழ் உண்டாகும்.
அனுஷம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.

தனுசு :

மறைப்பொருள் சம்பந்தமான ஞானத் தேடல் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். பிறருக்கு உதவும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : அமைதி வேண்டும்.
பூராடம் : செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

மகரம் :

நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் நீங்கி அமைதியான சூழல் ஏற்படும். தர்ம ஸ்தாபனங்களின் உதவிகளால் நிர்வாகிகளுக்கு பெருமை உண்டாகும். மனதில் எண்ணிய திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : பேச்சுகளில் கவனம் வேண்டும்.
திருவோணம் : மனக்கவலைகள் நீங்கும்.
அவிட்டம் : பெருமை உண்டாகும்.

கும்பம் :

வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்க காலதாமதமாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : நிதானத்துடன் செயல்படவும்.
சதயம் : கவனம் தேவை.
பூரட்டாதி : ஜெயம் உண்டாகும்.

மீனம் :

பொது நலத்திற்காக நன்கொடைகளை அளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கான மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமண வரன்கள் அமையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : புதிய நட்பு கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

 

Source: whatsapp messages

Comments

comments

Leave a Comment