Daily Raasi Palan

இன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13) செவ்வாய்க்கிழமை | Today rasi palan 27/3/2018

Guru Peyarchi Predictions 2017

இன்றைய ராசிபலன் 27/03/2018. பங்குனி (13) செவ்வாய்க்கிழமை | Today rasi palan 27/3/2018

இன்றைய நாள்பலன்

இன்று!

ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 13ம் தேதி, 27.3.2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 12:43 வரை;
அதன் பின் துவாதசி திதி, பூசம் நட்சத்திரம் காலை 10:39 மணி வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு.

மேஷம்

மேஷம்: பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிந்து சாதுர்யமாக தீர்ப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிகொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளி போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைகூர்ந்து பேசாதீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்
டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களைப் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

கன்னி

கன்னி: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். நம்பிக்கைகுரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். புது பொருள் சேரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

துலாம்

துலாம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துகொள்வார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

மகரம்

மகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

Comments

comments

Leave a Comment