இன்றைய ராசிபலன் 27.05.2019 திங்கட்கிழமை வைகாசி (13) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*வைகாசி – 13*
*மே – 27 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*வஸந்த*
*வ்ருஷப*
*க்ருஷ்ண*
*அஷ்டமி ( 13.26 ) ( 11:07am )*
&
*நவமி*
*இந்து*
*சதயம் ( 25.54 ) ( 03:55pm )*
&
*பூரட்டாதி*
*வைத்ருதி யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – நவமி*

_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_

_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._

_*கடக ராசி* க்கு மே 25 ந்தேதி நடு இரவு 12:32 மணி முதல் மே 28 ந்தேதி மதியம் 12:12 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 05:55am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:29pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:07am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் செயலில்வேகம் கூடும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில்உற்சாகம் பொங்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சி கள் பலிதமாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வீடு,வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில்வரம்பு மீறிப் பேச வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் திறமை களை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்
பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து அதனை பூர்த்தி செய்வீர்கள்.வழக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழையசரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

துலாம்: மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்தொடங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

தனுசு: உங்கள் பேச்சில்அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சிலர்உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன்  நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

மீனம்

மீனம்: எதிர்காலம் குறித்தபயம், வீண் கவலைகள் வந்துச்  செல்லும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். அசதி, சோர்வு வந்துநீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்துலாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்…

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*

*வாட்சப் ல் இணைய*

📲 +919486053609

⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Leave a Comment