இன்றைய ராசிபலன் 27.06.2019 வியாழக்கிழமை ஆனி 12 | Today rasi palan

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉*

*பஞ்சாங்கம் ~ *ஆனி* ~ *12* ~
{ *27.06.2019.*} *வியாழக்கிழமை*
*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}
*அயனம்*~ உத்தராயணம் .
*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.
*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)
*பக்ஷம்*~ கிருஷ்ண பக்ஷம்.
*திதி*~ தசமி.
*ஸ்ரார்த்த திதி ~ தசமி*.
*நாள்* வியாழக்கிழமை { குரு வாஸரம் } ~~~~~~~ *நக்ஷத்திரம் ~ ரேவதி காலை 06.14 AM வரை. பிறகு அஸ்வினி.*
*யோகம் ~ சித்த, அமிர்த ,யோகம்*.
*கரணம் ~வணிஜை, பத்ரம்.*
*நல்ல நேரம்*~ காலை 10.30 AM ~ 11.30 PM & …………… .
*ராகு காலம்*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM .
*எமகண்டம்*~ காலை 06.00 ~ 07.30 AM.
*குளிகை*~ காலை 09.00 ~10.30 AM.
*சூரிய உதயம்*~ காலை 05.56 AM .
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.35 PM.*
*சந்திராஷ்டமம்*~ சித்திரை .
*சூலம்*~ தெற்கு .
*பரிகாரம்*~ தைலம் .
*இன்று ~ *🙏

*🔯🕉 SRI RAMAJEYAM.🔯🕉*

*PANCHCHAANGAM*~
~ *AANI ~ 12*
~ *(27.06.2019) THURSDAY.*
*YEAR*~ VIKAARI VARUDAM {VIKAARI NAMA SAMVASTHRAIM}
*AYANAM* ~ UTHTHARAAYANAM.
*RUTHU*~ GREESHMA RUTHU.
*MONTH ~ AANI* { *MITHUNA MAASAM*}
*PAKSHAM* ~ KRISHNA PAKSHAM.
*THTHITHI*~ DHASAMI .
*SRAARTHTHA THITHI ~ DHASAMI*.
*DAY*~ THURSDAY( GURU VAASARAM)
*NAKSHATHRAM* ~ REVATHI UPTO 06.14 AM. AFTERWARDS ASWINI.
*YOGAM*~ SIDHDHA ,AMIRDHA
YOGAM .
*KARANAM*. ~ VANIJAI, BHADHRAM.
*RAGU KALAM*~: 01.30PM ~ 03.00PM.
*YEMAGANDAM*~ 06.00 ~07.30 AM.
*KULIGAI* : 09.00 ~10.30 AM .
*GOOD TIME*~ 10.30 AM TO 11.30 AM & *********
*SUN RISE* ~ 05.56 AM.
*SUN SET ~ 06.35 PM.*
*CHANTHRASHTAMAM*~ CHITHTHIRAI.
*SOOLAM* ~ SOUTH .
*Parigaram* ~ GINGELY OIL .
*TODAY*~ ** *🙏🙏🙏🙏

இன்றைய ராசிபலன்கள்…

மேஷம்

மேஷம்:  ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும்.வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்: உணர்ச்சிவேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.

மிதுனம்

மிதுனம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.

கடகம்

கடகம்:  தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சிலர் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.

துலாம்

துலாம்:  உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிக
ளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் ஒன்று முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரங்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்  கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!