இன்றைய பஞ்சாங்கம்  மற்றும் ராசிபலன் 28/1/2019 தை 14 திங்கட்கிழமை | Today rasi palan

பஞ்சாங்கம்

தை – 14
ஜனவரி – 28 – ( 2019 )
*திங்கட்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*அஷ்டமி ( 35.3 ) ( 08:01pm )*
&
*நவமி*
*இந்து*
*ஸ்வாதி ( 34.17 ) ( 07:43pm )*
&
*விசாகம்*
*ஸூல யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – அஷ்டமி*

*சந்திராஷ்டமம் – மீன ராசி*

_பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை ._

மீன ராசிக்கு ஜனவரி 27 ந்தேதி காலை 08:25 மணி முதல் ஜனவரி 29 ந்தேதி மதியம் 01:48 மணி வரை. பிறகு *மேஷ ராசி* க்கு சந்திராஷ்டமம்

_*சூர்ய உதயம் – 06:43am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:11pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*அமிர்த யோகம் – நாஸ யோகம்*_

மேஷம்

மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவு ரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்புஅதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்றுநிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறை வேறும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும்.தாய்வழி உறவினர்களுடன்கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப் பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக்கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைகையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம்பிறக்கும். அழகு, இளமைக்கூடும்.வெளிவட்டாரத்தில்புது அனுபவம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக்கிட்டும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டிவரும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்உதவுவார்கள். உத்யோகத்தில் உங்களின்புதிய முயற்சிகள் பலிதமாகும். பெருந்தன்
மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்குவரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்துமுடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமைத் தேவைப்படும் நாள்…

 

Comments

comments

Leave a Comment