இன்றைய ராசிபலன் 28/12/2018 மார்கழி 13 வெள்ளிக்கிழமை | Today rasi palan

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதி காரிகளின் உதவியால் சிலகாரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில்
லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண் பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடா தீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலு கைகள் தாமதமாக கிடைக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த-பந்தங்களால் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதி காரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிராகப் பேசியவர்கள் வளைந்து வருவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தவறு செய் பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டா கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்த வர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திட்டம் நிறைவேறும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோ கத்தில் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்…

 

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!