இன்றைய ராசிபலன் 28.06.2019 வெள்ளிக்கிழமை ஆனி 13 | Today rasi palan

*🚩பஞ்சாங்கம்

*{28.06.2019}* வெள்ளிக்கிழமை.

*ஆனி~13*

*வருடம்*~ விகாரி  வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}

*அயனம்*~ உத்தராயணம் .

*ருது*~ க்ரீஷ்ம ருதௌ.

*மாதம்*~ ஆனி ( மிதுன மாஸம்)

*பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்.*

*திதி* ~ ஏகாதசி .

*ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி.*

*நாள்* ~~ வெள்ளிக்கிழமை {ப்ருஹு வாஸரம் }  ~~~~~~~

*நக்ஷத்திரம் ~ அஸ்வினி காலை  07.45 AM.வரை. பிறகு பரணி*

*யோகம் ~ அமிர்த, சித்த யோகம்.*

*கரணம் ~ பவம் , பாலவம் .*.

*நல்ல நேரம்*~ காலை 09.15  AM ~ 10.15 AM  & 02.00 ~ 03.00  PM

*ராகு காலம்*~  காலை 10.30 AM ~ 12.00 NOON.

*எமகண்டம்*~ பிற்பகல் 03.00 ~  04.30  PM

*குளிகை*~ காலை 07.30~ 09.00 AM.

*சூரிய உதயம்* ~ காலை 05.56 AM .

*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 06.35 PM.

*சந்திராஷ்டமம் ~  சுவாதி*.

*சூலம்*~  மேற்கு .

*பரிகாரம்*~ வெல்லம்..

*இன்று ~ ஏகாதசி விரதம்.* 🙏🙏

🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩*

          *🔔28/6/2019🔔*

*🔯மேஷம் ராசி*

நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான வாய்ப்புகள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அசுவினி : நட்பு அதிகரிக்கும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

*🔯ரிஷபம் ராசி*

எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது நிதானம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண முயற்சிப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.

*🔯மிதுனம் ராசி*

விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். புண்ணிய தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : சேமிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்,

*🔯கடகம் ராசி*

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேலோங்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளால் இலாபம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : நினைவாற்றல் மேலோங்கும்.
பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.
ஆயில்யம் : காரியசித்தி உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

தொழில் முனைவோர்கள் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். தந்தையின் ஆதரவால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வெளிநாட்டு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : விவேகம் வேண்டும்.
பூரம் : அபிவிருத்தி உண்டாகும்.
உத்திரம் : சாதகமான நாள்.

*🔯கன்னி ராசி*

அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்காலத்திற்கு தேவையான செயல்பாடுகளை வகுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : சிந்தனைகள் மேலோங்கும்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : எச்சரிக்கை வேண்டும்.

*🔯துலாம் ராசி*

பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சுமாரான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : விமர்சனத்தை தவிர்க்கவும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

*🔯விருச்சகம் ராசி*

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் சார்ந்த பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். உறவினர்களால் சுபவிரயம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : வெற்றி கிடைக்கும்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : தேடல் உருவாகும்.

*🔯தனுசு ராசி*

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூராடம் : கவலைகள் குறையும்.
உத்திராடம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

*🔯மகரம் ராசி*

வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் துறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவோணம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அவிட்டம் : புகழப்படுவீர்கள்.

*🔯கும்பம் ராசி*

கடல் மார்க்க பணிகளால் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். அறச் செயல்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். சுபச் செய்திகள் வந்தடையும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். திருமணத்திற்கான வரன்கள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : தனலாபம் உண்டாகும்.
சதயம் : சுபச் செய்திகள் வரும்.
பூரட்டாதி : வரன்கள் அமையும்.

*🔯மீனம் ராசி*

வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : தடைகள் நீங்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!