இன்றைய ராசிபலன் 11/29/2018 கார்த்திகை 13 வியாழக்கிழமை | Today rasi palan 29/11/2018

 

இன்றைய ராசிபலன்கள் (29.11.2018)

மேஷம் :

அறப்பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் மேன்மை ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு அனைவரின் ஆதரவும், அனுகூலமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அசுவினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரிஷபம் :

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் செயல்களால் நற்பெயரும், செல்வாக்கும் உயரும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம் :

புதிய இயந்திரங்களைப் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். மனதில் இருந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு காண முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். தொழில் சார்ந்த எண்ணங்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடகம் :

சமூக சேவைகள் தொடர்பான முயற்சிகள் எண்ணிய பலனை அளிக்கும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : மகிழ்ச்சி பெருகும்.
ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.

சிம்மம் :

தாய்மாமன் உறவு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் சற்று நிதானத்துடன் செயல்படவும். செய்யும் செயல்களில் இருந்து வந்த தடைகள் குறையும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து செய்யும் செயல்களை கவனத்துடன் செயல்படுத்தவும். இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : அமைதி வேண்டும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.

கன்னி :

கல்வி பயிலும் மாணவர்கள் பயிலும் பாடங்களை கவனத்துடன் படிக்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களால் சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அஸ்தம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

துலாம் :

வீடு, மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத திடீர் யோகங்களின் மூலம் தனவரவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.
விசாகம் : சுபிட்சம் உண்டாகும்.

விருச்சகம் :

தொழில் சார்ந்த முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு இருந்து வந்த தடைகள் நீங்கும். மனதில் நினைத்த எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் அதற்கான வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
அனுஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கேட்டை : தடைகள் நீங்கும்.

தனுசு :

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அனுகூலமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பொருட்சேர்க்கைக்கான எண்ணங்களும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வலது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன, தானிய சம்பத்துகளால் இலாபகரமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

மகரம் :

சந்திராஷ்டம தினம் என்பதால் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். உங்களின் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களில் எண்ணிய பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : உணவு விஷயத்தில் கவனம் தேவை.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.

கும்பம் :

வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமான பலன்களை அளிக்கும். நண்பர்களுடன் மேற்கொள்ளும் பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சுபிட்சமான நாள்.
சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மீனம் :

மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக சேவையில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். திருமணம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருள் சேர்ப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 

Leave a Comment