இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 3.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை – 17 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*கார்த்திகை – 17*
*டிசம்பர் – 03 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*வ்ருஸ்சிக*
*ஸுக்ல*
*ஸப்தமி ( 45.42 )*
*பௌம*
*அவிட்டம் ( 24.46 ) ( 03:56pm )*
&
*சதயம்*
*வ்யாகாத யோகம்*
*கரஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – ஸப்தமி*

_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_

_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._

_*கடக ராசி* க்கு டிசம்பர் 02 ந்தேதி நடு இரவு 02:49 மணி முதல் டிசம்பர் 05 ந்தேதி மதியம் 02:15 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:20am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:41pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:08am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் நாஸ யோகம்*_

 

இன்றைய (03-12-2019) ராசி பலன்கள்

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையேயான உறவு மேம்படும். தீர்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். சுயதொழில் புரிவோருக்கு ஏற்பட்ட பணச் சிக்கல்கள் நீங்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.

பரணி : சிக்கல்கள் நீங்கும்.

கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
—————————————ரிஷபம்

எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.

ரோகிணி : சுபிட்சம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
—————————————மிதுனம்

திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : வெற்றி கிடைக்கும்.

புனர்பூசம் : அனுகூலமான நாள்.
—————————————கடகம்

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : சிந்தனைகள் தோன்றும்.
—————————————சிம்மம்

விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செவித்திறனில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறையும். செய்தொழிலின் மேன்மைக்கான புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். தாயின் உடல்நிலையில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : உபாதைகள் குறையும்.

உத்திரம் : செல்வாக்கு உயரும்.
—————————————கன்னி

சாதுர்யமான பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவியால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். தலைமைப் பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். மகான்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : தேன் நிறம்

உத்திரம் : இலாபம் அடைவீர்கள்.

அஸ்தம் : மகிழ்ச்சி ஏற்படும்.

சித்திரை : ஆசிகள் கிடைக்கும்.
—————————————துலாம்

புதிய வாகனச்சேர்க்கை ஏற்படும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : பொருட்சேர்க்கை உண்டாகும்.

சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.

விசாகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
—————————————விருச்சகம்

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் வகுத்து அதனை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு ஆதாயம் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : காரியசித்தி உண்டாகும்.

அனுஷம் : சாதகமான நாள்.

கேட்டை : வெற்றி கிடைக்கும்.
—————————————தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடைகளின் சேர்க்கை உண்டாகும். அந்நியர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்காக திட்டமிடுவீர்கள். பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : பேச்சில் கவனம் வேண்டும்.

பூராடம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
—————————————மகரம்

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். புத்திரர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : சாதகமான சூழல் அமையும்.

திருவோணம் : ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.

அவிட்டம் : அனுகூலமான நாள்.
—————————————கும்பம்

அறப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வசதி வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து சாதகமான செய்திகள் வரும். ஞான உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். அலைச்சல்களால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.

சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.
—————————————மீனம்

விவாதங்களில் சாதகமான சூழலால் வெற்றி கிடைக்கும். சமூகசேவை புரிபவர்களுக்கு புகழ் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிய கலைகளை கற்க ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி : புகழ் உண்டாகும்.

ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!