இன்றைய ராசிபலன் 30/3/2018 பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.!! ( இன்று பங்குனி உத்திரம்

இன்றைய நாள்பலன்

இன்று!

ஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 16ம் தேதி, 30.3.2018 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:30 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, பூரம் நட்சத்திரம் காலை 7:06 வரை; அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00 – 10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30 – 12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00 – 4:30 மணி
* குளிகை : காலை 7:30 – 9:00 மணி

* சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம்
* சந்திராஷ்டமம் : அவிட்டம்
* பொது : பங்குனி உத்திரம், குலதெய்வம், சாஸ்தா வழிபாடு. சுபமுகூர்த்தநாள்.

*மேஷம்*

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

*ரிஷபம்*

ரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

*மிதுனம்*

மிதுனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாக பேசி வேலை வாங்குவீர்கள். சிறப்பான நாள்.

*கடகம்*

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

*சிம்மம்*

சிம்மம்: நண்பகல்12.43 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். பிற்பகல் முதல் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

*கன்னி*

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பகல் 12.43 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

*துலாம்*

துலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

*விருச்சிகம்*

விருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக பேசுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

*தனுசு*

தனுசு: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

*மகரம்*

மகரம்: நண்பகல் 12.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பிற்பகல் முதல் தடைகள் உடைபடும் நாள்.

*கும்பம்*

கும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். நண்பகல் 12.43 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

*மீனம்*

மீனம்: அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!