இன்றைய ராசிபலன் 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை பங்குனி (17) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*பங்குனி – 17*
*மார்ச் – 31 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*மீன*
*க்ருஷ்ண*
*ஏகாதசி ( 60.0 )*
*பானு*
*திருவோணம் ( 36.17 ) ( 08:44pm )*
&
*அவிட்டம்*
*ஸித்த யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு மார்ச் 29 ந்தேதி இரவு 10:24 மணி முதல் ஏப்ரல் 01 ந்தேதி காலை 09:48 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:20am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:22pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*தின விசேஷம் – ஸ்ரவண விரதம்*_

 

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*ஸித்த யோகம் – ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதா யம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறு வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை கள் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியுடன் காணப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளைப் பேசி சுமூகமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத் தை போராடி வசூலிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். எதிர்பார்த்த இடத் திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்
கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். சுறுசுறுப்புடன் செயல் பட்டு தேங்கிக் கிடந்த வேலை களை விரைந்து முடிப்பீர் கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபா ரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இனிமையான நாள்…

 

Comments

comments

Leave a Comment