இன்றைய ராசி பலன்கள்…..  4/3/2019 திங்கள்கிழமை

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 20*
*மார்ச் – 04 – ( 2019 )*
*திங்கட்கிழமை*
*விளம்பி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*க்ருஷ்ண*
*த்ரயோதசி ( 28.44 ) ( 05:50pm )*
&
*சதுர்தசி*
*இந்து*
*திருவோணம் ( 17.55 ) ( 01:26pm )*
&
*அவிட்டம்*
*பரிக யோகம்*
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ரயோதசி*

*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு மார்ச் 02 ந்தேதி மதியம் 02:59 மணி முதல் மார்ச் 04 ந்தேதி நடு இரவு 02:27 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:38am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:20pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*தின விசேஷம் – மஹா சிவராத்திரி*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*அமிர்த யோகம் – ஸுப யோகம்*_

*🔯மேஷம் ராசி*

மனதில் இருந்து வந்த கவலைகள் அகலும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அசுவினி : கவலைகள் அகலும்.

பரணி : பயணங்கள் உண்டாகும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

*🔯ரிஷபம் ராசி*

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் மறையும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிடம் : அனுகூலம் உண்டாகும்.

*🔯மிதுனம் ராசி*

மனதில் நினைத்த காரியம் சில தடைகளுக்கு பின் ஈடேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிடம் : அமைதி வேண்டும்.

திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

*🔯கடகம் ராசி*

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

பூசம் : ஆதாயமான நாள்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழிலில் செய்யும் சிறு மாற்றங்களால் இலாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*🔯கன்னி ராசி*

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் சார்ந்த முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : இன்னல்கள் குறையும்.

சித்திரை : புதிய அனுபவம் கிடைக்கும்.

*🔯துலாம் ராசி*

குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனை தொடர்பான விவகாரங்களில் ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.

சுவாதி : மேன்மை உண்டாகும்.

விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.

*🔯விருச்சகம் ராசி*

மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். அனுபவ அறிவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.

அனுஷம் : பொறுப்புகள் குறையும்.

கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

*🔯தனுசு ராசி*

புத்திரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப நபர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பூராடம் : சுபிட்சமான நாள்.

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

*🔯மகரம் ராசி*

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபச் செய்திகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

அவிட்டம் : எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

*🔯கும்பம் ராசி*

முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொருட்சேர்க்கை உண்டாகும். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

சதயம் : நிதானம் வேண்டும்.

பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

*🔯மீனம் ராசி*

புதிய முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : உயர்வு உண்டாகும்.

ரேவதி : வாய்ப்புகள் அமையும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!