Daily Raasi Palan

Today Rasi Palan 5/8/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (20) சனிக்கிழமை

Guru Peyarchi Predictions 2017

Today Rasi Palan

இன்றைய ராசிபலன் 5/8/2017 ஆடி (20) சனிக்கிழமை.!!

 

*மேஷம்*

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

*ரிஷபம்*

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

*மிதுனம்*

மிதுனம்: மூத்த சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் திருப்தி உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத் தில் அமைதி நிலவும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

*கடகம்*

கடகம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

*சிம்மம்*

சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி சில பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.

*கன்னி*

கன்னி: சகோதரங்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

*துலாம்*

துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்தது முடியும் நாள்.

*விருச்சிகம்*

விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

*தனுசு*

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பண விஷயங் களில் சாக்கு சொல்லி சமாளிப்பீர்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோ கத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

*மகரம்*

மகரம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

*கும்பம்*

கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இனிமையான நாள்.

*மீனம்*

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர் பாராத சந்திப்பு நிகழும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்…

 

Comments

comments

Leave a Comment