இன்றைய ராசிபலன் 06/04/2018 பங்குனி (23), வெள்ளிக்கிழமை |  Today rasi palan 6/4/2018

மேஷம் :

பணியில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளால் கீர்த்தி பெறுவீர்கள். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் தலைமை அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அசுவினி : திறமைகள் வெளிப்படும்.
பரணி : ஆலோசனை கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவு உண்டாகும்.

ரிஷபம் :

தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் அமையும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : விவேகம் வேண்டும்.
ரோகிணி : வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் : செயல்பாடுகளில் கவனம் தேவை.

மிதுனம் :

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மிருகசீரிடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : பயணங்களில் கவனம் தேவை.

கடகம் :

எதிர்பார்த்த தன உதவிகள் கிடைக்கும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம் :

பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதாரத்தில் மேன்மையான நிலை உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். புதிய தொழில் நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : சேமிப்பு உயரும்.
பூரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரம் : புதிய நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.

கன்னி :

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற முன்னுரிமை கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்கள் விரைவில் முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : செயல்பாடுகள் மேலோங்கும்.

துலாம் :

சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

சித்திரை : மதிப்பு உயரும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : காரிய சித்தி உண்டாகும்.

விருச்சகம் :

தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : எண்ணிய உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

தனுசு :

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். அந்நியர்களின் உதவிகளால் பொருட்சேர்க்கை உண்டாகும். எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான கறுப்பு

மூலம் : இலாபம் கிடைக்கும்.
பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

மகரம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள். புத்திரர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்தடையும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

கும்பம் :

எண்ணங்கள் மேம்படும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். உயர் கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : ஞானம் கிடைக்கும்.
சதயம் : பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

மீனம் :

வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். திருமணத்திற்கான வரன்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : ஆரோக்கிய குறைகள் நீங்கும்.
ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!