இன்றைய ராசிபலன் 7/10/2017 புரட்டாசி (21) சனிக்கிழமை.!!

இன்றைய நாள் சிறப்பு
நல்ல நேரம் :
காலை – 7.45 – 8.45
மாலை – 3.00 – 4.00

கௌரி நல்ல நேரம் :

பகல் – 10.45 – 11.45

இரவு – 9.30 – 10.30

இராகு – 9.00 – 10.30

குளிகை – 6.00 – 7.30

எமகண்டம் – 1.30 – 3.00

நட்சத்திரம் : இரவு 8.22 வரை அஸ்வினி பின்பு பரணி

திதி : துவிதியை

யோகம் : சித்த யோகம்

பொது தகவல்
நாள் – சமநோக்கு நாள்

சூரிய உதயம் – 6.02

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

சந்திராஷ்டமம் – அஸ்தம், சித்திரை

வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு.

மூன்றாவது சனிக்கிழமை பெருமாள் வழிபாடு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் கருட வாகன பவனி.

*இன்று எதற்கெல்லாம் சிறப்பு?*

பெருமாளை வழிபட உகந்த நாள்.

இன்று கால் நடைகள் வாங்க சிறந்த நாள் ஆகும்.

வாகனம் வாங்கலாம்.

நிலங்களை உழுது பயிர் செய்யலாம்.

வீட்டில் தளம் அமைக்கலாம்.

யாத்திரை செல்லவும் இன்று உகந்த நாளாகும்.

 

*மேஷம்*

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவினி நட்சத்திரக்காரர் கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

*ரிஷபம்*

ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பரிவாக பேசுங்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

*மிதுனம்*

மிதுனம்: ஆன்மிகப் பெரி யோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியா பாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்க ளின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இனிமையான நாள்.

*கடகம்*

கடகம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களின் வருகை யால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத் தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

*சிம்மம்*

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உற வினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

*கன்னி*

கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

*துலாம்*

துலாம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சி கள் பலிதமாகும். வேற்றுமதத்தவர் அறிமுக மாவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

*விருச்சிகம்*

விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

*தனுசு*

தனுசு: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள் வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

*மகரம்*

மகரம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர்ப்புகள் அடங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந் தரவு குறையும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

*கும்பம்*

கும்பம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

*மீனம்*

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. முகப் பொலிவு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!