இன்றைய ராசிபலன் 7/12/2018 கார்த்திகை 21 வெள்ளிக்கிழமை

இன்றைய ராசிபலன்கள் (07.12.2018)

மேஷம் :

உத்தியோகஸ்தரர்கள் பணிபுரியும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் வேலைகளை நீங்களே முடிப்பது சிறப்பு. வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : பணிகளில் கவனம் தேவை.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

ரிஷபம் :

செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவிக்கான சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : உறவு மேம்படும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.

மிதுனம் :

உத்தியோகத்தில் திறமைக்கேற்ப பதவி உயர்வும், வழிகாட்டுதலும் கிடைக்கும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கால்நடைகளால் சில விரயச் செலவுகள் உண்டாகும். பயணங்களின்போது எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிடம் : கவனம் தேவை.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

கடகம் :

இளைய சகோதரர்களால் சுபச் செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். வெளிநாட்டு பயணங்களால் இலாபம் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : புத்திரர்களின் ஆதரவு கிடைக்கும்.
ஆயில்யம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

சிம்மம் :

மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

கன்னி :

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : மேன்மையான நாள்.

துலாம் :

குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். நிர்வாகத் துறையில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். நீர் வழி வியாபாரங்களால் சுமாரான தனவரவு உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : தனவரவு உண்டாகும்.
விசாகம் : வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும்.

விருச்சகம் :

வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : காரியசித்தி உண்டாகும்.
கேட்டை : அனுசரித்துச் செல்லவும்.

தனுசு :

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் ஆதரவால் சேமிப்பு உயரும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : இன்பமான நாள்.
பூராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திராடம் : உயர்வான நாள்.

மகரம் :

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதியாக நடந்து கொள்ளவும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

கும்பம் :

பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுவோர் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். தொழில் வகை அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : பேச்சில் கவனம் வேண்டும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : தனவிரயம் உண்டாகும்.

மீனம் :

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மாணவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : உறவு மேம்படும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!