இன்றைய ராசிபலன் 07.03.2019 வியாழக்கிழமை மாசி (23) | Today rasi palan

07 – 03 – 2019
வியாழக்கிழமை

விளம்பி ஆண்டு
மாசி மாதம் 23 – ம் நாள் .

இன்றைய நல்ல நேரம்:

காலை :
10.30 மணி முதல் 11.30 மணி வரை .

பகல் :
12.30 மணி முதல் 01.30 மணி வரை .‌

இரவு:
06.30 மணி முதல் 07.30 மணி வரை .

இன்றைய நட்சத்திரம் :
பூரட்டாதி ( இன்று இரவு 08.59 மணி வரை ) பின்னர் உத்திரட்டாதி ( இன்று இரவு 08.59 மணி முதல் நாளை இரவு 10.55 மணி வரை ) பிறகு ரேவதி .

வளர்பிறை திதி :
பிரதமை ( இன்று இரவு 11.46 மணி வரை) பின்னர் துவிதியை ( இன்று இரவு 11.46 மணி முதல் நாளை பின்னிரவு 01.19 மணி வரை) பிறகு திரிதியை .

சந்திராஷ்டமம்:
மகம் , பூரம் .

சூரிய உதயம் :
காலை
06.26 மணி

ராகுகாலம்:
பிற்பகல்
01.30 மணி முதல் 03.00 மணி வரை .

எமகண்டம் :
காலை
06.00 மணி முதல் 07.30 மணி வரை .

 

💐இன்று – 07.03.2019💐

🌏இன்றைய பஞ்சாங்கம்🌏

🎎குழும நண்பர்கள் அனைவருக்கும் கனிவான காலை வணக்கம் இந்தநாள் இனியநாளாக வாழ்த்துக்கள்

🌼07-03-2019, மாசி 23, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 11.44 வரை பின்பு வளர்பிறை துதியை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 08.53 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சுபமுயற்சிகளை
தவிர்க்கவும்🌼

🌼இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00🌼

🍁இன்றைய ராசிப்பலன்🍁

🌷aries-மேஷம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைபளு குறையும்.

🌷taurus-ரிஷபம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

🌷gemini-மிதுனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

🌷cancer-கடகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு பகல் 02.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை.

🌷leo-சிம்மம்

இன்று பகல் 02.15 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

🌷virgo-கன்னி

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

🌷libra-துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

🌷scorpio-விருச்சிகம்

இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

🌷sagittarius-தனுசு

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.

🌷capricorn-மகரம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

🌷aquarius-கும்பம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.

🌷pisces-மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பயணம் உண்டாகும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!