இன்றைய ராசிபலன் 07.05.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை (24) | Today rasi palan

மேஷம்

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்க்ள. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு

தனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.

கும்பம்

கும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். செலவுகள் குறையும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்…

செல்வம் பெருக #மகாலட்சுமி_ஸ்லோகம் 7/5/2019 அன்று அக்ஷய திருதியை…..

Mahalakshmi Slogam | செல்வம் பெருக மகாலட்சுமி ஸ்லோகம்

#அட்சய_திருதியை பற்றிய 60 தகவல்கள் மற்றும் சிறந்த நிகழ்வுகள். 7/5/2019 அட்சய திருதியை நாள்….

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள் | Akshaya Tritiya

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!