இன்றைய ராசிபலன் 08/04/2018, பங்குனி (25), ஞாயிற்றுக்கிழமை | Today rasi palan 8/4/2018

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். ஆதாயம் உண்டாகும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

கன்னி: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிரச்னைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வபோது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத் யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

Comments

comments

Leave a Comment