இன்றைய ராசிபலன் 08.06.2019 சனிக்கிழமை வைகாசி (25) | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*வைகாசி – 25*
*ஜூன் – 08 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*வஸந்த*
*வ்ருஷப*
*ஸுக்ல*
*சதுர்த்தி ( 3.50 ) ( 07:07am )*
&
*ஷஷ்டி ( 53.56 )*
*ஸ்திர*
*ஆயில்யம் ( 37.59 ) ( 08:43pm )*
&
*மகம்*
*வ்யாகாத யோகம்*
*பாலவ கரணம் ( 3.50 ) ( 07:07am )*
&
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஷஷ்டி*

_*சந்திராஷ்டமம் – தனுசு ராசி*_

_மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை ._

_*தனுசு ராசி* க்கு ஜூன் 06 ந்தேதி மாலை 04:54 மணி முதல் ஜூன் 08 ந்தேதி இரவு 07:37 மணி வரை. பிறகு *மகர ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 05:55am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:31pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:07am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஷஷ்டி விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*மரண யோகம் – ஸுப யோகம்*_

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
ராசிபலன்
08-06-2019
சனிக்கிழமை
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
மேஷம் ♈

பிறரை குற்றம் சொல்வதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு ஊக்கம் அளிப்பார்கள். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் – எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

ரிஷபம் ♉

உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். ரொமாண்டிக்கான நினைவுகள் இன்றைய நாளில் ஆக்கிரமித்திருக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மிதுனம் ♊

நீண்டகாலமாக அனுபவித்து வந்த டென்சன்களில் இருந்து விடுபடுவீர்கள். அவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம் இது. முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்களில் பிள்ளைகள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். உங்கள் காதலை புதியதைப் போல மதிப்புமிக்கதாக ஆக்கிடுங்கள். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கடகம் ♋

நம்பிக்கையும் சக்தியும் இன்று அதிகமாக இருக்கும். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்களில் சிலர் உங்களை நெருக்கமாக கவனித்து உங்களையே ரோல் மாடலாகவும் கருதுகிறார். உங்கள் நற்பெயரை அதிகரிக்கும் வகையில் பாராட்டத்தக்க செயல்களை மட்டுமே செய்யுங்கள். இன்று ஒரு மனம் உடைவதை தடுத்து நிறுத்துவீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

சிம்மம் ♌

இடையூறான உணர்வுகள் மற்றும் உந்துதல்களை கட்டுப்படுத்துங்கள். பழமையான சிந்தனைகள் / பழைய ஐடியாக்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்கலாம் – வளர்ச்சியை பாதிக்கலாம். மேற்கொண்டு முன்னேற தடையாக இருக்கலாம். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் பயனற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தி குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். உங்கள் டார்லிங்கின் மாறுபட்ட நடத்தையால் நீங்கள் அப்செட் ஆவீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
கன்னி ♍

சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். சிலருக்கு – குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

துலாம் ♎

ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். மனைவியின் விவகாரங்களில் தலையிடுவது அவருக்கு ஆத்திரமூட்டும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். திருமணங்கள் ஏன் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்று இன்று நீங்கள் உணர்வுபூர்வமாக தெரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

விருச்சிகம் ♏

பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாள். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சூழ்நிலையையும் தேவைகளையும் புரிந்து கொள்ளக் கூடிய நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் – நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

தனுசு ♐

உங்கள் துணைவரின் லவ்லியான மனநிலை உங்கள் நாளை பிரகாசமாக்கும். விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். வீட்டில் இணக்கத்தை ஏற்படுத்த நெருக்கமான ஒத்துழைப்பாக செயல்படுங்கள். உங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் – உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மகரம் ♑

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

கும்பம் ♒

உங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்: 2⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱

மீனம் ♓

உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள தனிப்பட்ட உறவுகளை தவறாகப் பயன்படுத்துவது உங்கள் மனைவிக்கு கவலையை ஏற்படுத்தும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். உபரியாக கிடைத்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள் – அதற்காக வழக்கத்தைவிட கொஞ்சம் மாறியும்கூட போகலாம். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இன்று உங்கள் மண வாழ்வின் மிக வண்ணமயமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 8⃣
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!