Today rasi palan 9th november 2017

இன்றைய ராசிபலன் 9/11/2017 ஐப்பசி (23) வியாழக்கிழமை

மேஷம்

மேஷம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன வசதி பெருகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மிதுனம்

மிதுனம்: மதியம் 1.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர் சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

கன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்

துலாம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மதியம் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மதியம் 1.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரசெலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். சகோதரி உதவுவார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்…

Comments

comments

Leave a Comment