இன்றைய ராசிபலன் 09.05.2019 வியாழக்கிழமை சித்திரை (26) | Today rasi palan

பஞ்சாங்கம்

9-5-2019
Thursday, May 9, 2019
விகாரி – 2019
சித்திரை – 26  
வியாழக்கிழமை
 • சூரியோதயம் — 5:48 am
 • சூரியஸ்தமம் — 6:22 pm
 • அயனம் — உத்தராயணம்
திதி

 1. சுக்ல பக்ஷ பஞ்சமி — May 09 12:59 AM – May 09 11:26 PM
 2. சுக்ல பக்ஷ சஷ்டி — May 09 11:26 PM – May 10 09:41 PM
நட்சத்திரம்

 1. திருவாதிரை — May 08 04:00 PM – May 09 03:17 PM
 2. புனர்பூசம் — May 09 03:17 PM – May 10 02:21 PM
கரணம்

 1. பவம் — May 09 12:59 AM – May 09 12:14 PM
 2. பாலவம் — May 09 12:14 PM – May 09 11:26 PM
 3. கௌலவம் — May 09 11:26 PM – May 10 10:35 AM
யோகம்

 1. த்ருதி— May 08 09:17 PM – May 09 07:00 PM
 2. சூலம்— May 09 07:00 PM – May 10 04:33 PM
 • சந்திரௌதயம்— May 09 09:27 AM
 • சந்திராஸ்தமனம்— May 09 10:40 PM
அசுபமான காலம்

 • இராகு— 1:39 PM – 3:13 PM
 • எமகண்டம்— 5:48 AM – 7:23 AM
 • குளிகை— 8:57 AM – 10:31 AM
 • துரமுஹுர்த்தம்
  1. 09:59 AM – 10:50 AM
  2. 03:01 PM – 03:51 PM
 • தியாஜ்யம்
  1. 02:49 AM – 04:21 AM
சுபமான காலம்

அபிஜித் காலம் 11:40 AM – 12:30 PM
அமிர்த காலம்
 1. None
Brahma Muhurat 04:12 AM – 05:00 AM
ஆனந்ததி யோகம்

 1. kaan Upto – May 09 03:17 PM
 2. siddhi
சூர்யா ராசி

 1. மேஷம்
சந்திர ராசி

 1. மிதுனம்
சந்திர மாதம்

 • அமாந்த — வைசாகம்
 • பூர்ணிமாந்த — வைசாகம்
 • Saka — வைசாகம் 19, 1941
 • Vedic Ritu— Vasant (Spring)
 • Drik Ritu— Grishma (Summer)
 • Shaiva Dharma Ritu— Nartana
Tamil Yoga

 1. Marana Upto – May 09 03:17 PM
 2. Amrutha
Chandrashtama 

 1. 1. Vishaka Last 1 padam, Anuradha , Jyeshta
Others

 • Agnivasa — Prithvi (Earth)
 • Chandra Vasa — மேற்கு
 • Disha Shool — south
 • Rahukala Vasa — south
வாரசூலை

 1. சூலம் — தெற்கு
 2. பரிகாரம் — தைலம்
Auspicious Yogas

 1. Sarvartha Siddhi — May 09 03:17 PM – May 10 05:48 AM

மேஷம்

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதிய பாதை தெரியும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாம்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை மேலதிகாரி பாராட்டுவார். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். கனவு நனவாகும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்…

Leave a Comment