இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 1.11.2019 வெள்ளிக்கிழமை ஐப்பசி – 15 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 15*
*நவம்பர் – 01 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*பஞ்சமி ( 57.16 )*
*ப்ருகு*
*மூலம் ( 50.50 )*
*அதிகண்ட யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – பஞ்சமி*

_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு அக்டோபர் 31 ந்தேதி நடு இரவு 01:54 மணி முதல் நவம்பர் 03 ந்தேதி காலை 09:38 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:49pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:57am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – ஸித்த யோகம்*_

 

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் குறையும். தேவையற்ற சிந்தனைகளை விலக்கி தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். முன்னேற்றம் நோக்கி பயணிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எந்த காரியத்திலும் அவசரப்பட்டு செயல்பட வேண்டாம். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் செயல்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: மனைவி உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீண்டநாளாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். நல்லவை நடக்கும் சுப நாள்.

கடகம்

கடகம்: வழக்கில் சாதமான தீர்ப்பு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் உங்கள் அர்பணிப்பு உயரதிகாரிகளால் பாரட்டப்படும். சுற்றத்தார் மத்தியில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கனியை ருசிக்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்லன பல நடக்கும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் செயல்களை திறம்பட செய்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: எந்த விஷயத்திலும் தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக மன அழுத்தம், கவலை நீங்கும். தடைபட்ட காரியங்கள் விரைவாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தனவரவு உண்டு. வியாபாரம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் உங்கள் கோபத்தை வெளிப் படுத்துவதை தவிர்க்கவும். வீண் விவாதங்களை தவிருங்கள். மற்றவர்களின் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: உங்கள் முயற்சிகளில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும். எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் அலைச்சல் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விவேகமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் செயல்களில் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

மீனம்

மீனம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் கை ஓங்கும். சாதிக்கும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!