இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 1.9.2019 சனிக்கிழமை ஆவணி – 15 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆவணி – 15*
*செப்டம்பர் – 01 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*ஸிம்ஹ*
*ஸுக்ல*
*த்விதீயை ( 14.17 ) ( 11:44am )*
&
*த்ருதீயை*
*பானு*
*உத்திரம் ( 23.16 ) ( 03:20pm )*
&
*ஹஸ்தம்*
*ஸாத்ய யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ருதீயை*

_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_

_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*கும்ப ராசி* க்கு ஆகஸ்ட் 31 ந்தேதி இரவு 10:31 மணி முதல் செப்டம்பர் 02 ந்தேதி நடு இரவு 01:11 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:08am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:26pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:56am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

 

இன்றைய ராசிபலன் 01.9.2019 ஆவணி ( 15 ) ஞாயிற்றுக்கிழமை.!!*_

மேஷம்

மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்,நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதுமைபடைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும்.நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப் பால் உயரும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள் அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கன்னி

கன்னி:  ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். அதை பெரிதுபடுத்த வேண்டாம். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபா ரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பு மிகுந்த நாள்.

தனுசு

தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல்  உருவாகும். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!