இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.1.2020 வெள்ளிக்கிழமை மார்கழி – 25 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மார்கழி – 25*
*ஜனவரி – 10 – ( 2020 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஹேமந்த*
*தனுர்*
*ஸுக்ல*
*பௌர்ணமி ( 47.43 )*
*ப்ருகு*
*திருவாதிரை ( 22.22 ) ( 03:27pm )*
&
*புனர்பூசம்*
*மாஹேந்திர யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – பௌர்ணமி*

_*சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி*_

_விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை ._

_*விருச்சிக ராசி* க்கு ஜனவரி 08 ந்தேதி நடு இரவு 02:59 மணி முதல் ஜனவரி 11 ந்தேதி காலை 08:30 மணி வரை. பிறகு *தனுசு ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:39am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:01pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:27pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஆருத்ரா தரிசனம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழையபிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம்  சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் பெருகும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள்  நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மற்ற மொழியினரால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். புதுத்தொழில் தொடங்கும். முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் மதிக்கப் படுவீர்கள். இனிமையான நாள்.

துலாம்

துலாம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய பலம் பலவீனம் அறிந்து செயல் படுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல் பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டைவிரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மை நடக்கும் நாள்.

மகரம்

மகரம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதா ரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

கும்பம்

கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்னைகளில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தொடர்புகள் விரிவடையும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!