இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை – 24 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*கார்த்திகை – 24*
*டிசம்பர் – 10 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*வ்ருஸ்சிக*
*ஸுக்ல*
*த்ரயோதசி ( 11.56 ) ( 10:49am )*
&
*சதுர்தசி*
*பௌம*
*கார்த்திகை ( 60.0 )*
*ஶிவ யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்தசி*

_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு டிசம்பர் 10 ந்தேதி காலை 11:46 மணி முதல் டிசம்பர் 12 ந்தேதி இரவு 07:22 மணி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:25am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:47pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:13am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – க்ருத்திகை விரதம்*_
&
_*மலை தீபம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

 

மேஷம்: கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள், விரும்பி வருவார்கள். வராதுஎன்று இருந்த பணம் கைக்குவரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந் தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய

சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால், சிக்கலான, சவாலான, காரியங்களை எல்லாம்கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். குடும்பத்தினைரப்பற்றி யாரிடமும், குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக் கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மறைமுக விமர்சனமும், தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கடிந்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண் டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்

கடகம்: சவாலான விஷயங்க ளையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். விரும்பியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி,வாழ்வில் உயர்வதற்கான வழியைப்பற்றி யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத் தில் உங்களை நம்பி, சில முக்கிய பொறுப்புக்களை உயரதிகாரி ஒப்படைப்பார். வியாபாரத் தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கனிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மனசாட்சிப்படி செயல்பட வேண் டிய நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடங் குவதால் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத் தாரின் விருப்பங்களை நிறை வேற்ற போராட வேண்டி இருக்கும். அடுத்தவரை குறைக்கூறுவதை நிறுத்துங் கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண் டாம். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண் டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன் பலம், பல வீனத்தை உணர்வீர்கள். சகோதரவகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின், எண் ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

தனுசு

தனுசு: பண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டா கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண் டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

கும்பம்

கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களின் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக அமையும். செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!