இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.5.2020 ஞாயிற்றுக்கிழமை சித்திரை – 27 | Today rasi palan

*🕉ஶ்ரீராமஜெயம்🕉*.

*பஞ்சாங்கம் ~ சித்திரை ~ 27* ~
*{10.05.2020}*~ *ஞாயிற்றுக்கிழமை*.
*1.வருடம் ~ சார்வரி வருடம். { சார்வரி நாம சம்வத்ஸரம்}*
*2.அயனம் ~ உத்தராயணம்.*
*3.ருது ~ வஸந்த ருதௌ.*
*4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்).*
*5.பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம்.*
*6.திதி~ திரிதியை பகல் 12.04 PM. வரை. பிறகு சதுர்த்தி.*
*ஸ்ரார்த்த திதி ~ சதுர்த்தி .*
*7.நாள் ~ ஞாயிற்றுக்கிழமை {பாநு வாஸரம் }. ~~~~~~~ 8.நக்ஷத்திரம் ~ கேட்டை காலை 08.40 AM.வரை. பிறகு மூலம்*

*யோகம் ~ காலை 08.40 AM. வரை சரி இல்லை. பிறகு சித்த,யோகம் .*
*கரணம் ~ பத்ரம், பவம்.*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 03.00 PM ~ 04.00 PM.*
*ராகு காலம் ~ மாலை 4.30 pm~ 06.00 pm.*
*எமகண்டம் ~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM.*
*குளிகை ~ பிற்பகல் 03.00 ~ 04.30 PM.*
*சூரிய உதயம் ~காலை 05.54. AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.22 PM.*
*சந்திராஷ்டமம் ~ கார்த்திகை .*
*சூலம் ~ மேற்கு.*
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று*~ *சங்கட ஹர சதுர்த்தி*🙏🙏
*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*

*PANCHAANGAM*~
*CHITHTHIRAI*~ *27* ~ *(10.05.2020) ~ SUNDAY.*
*1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM }*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM.*
*3.RUTHU ~ VASANTHA RUTHU.*
*4.MONTH ~ CHITHTHIRAI. (MESHA MAASAM}*
*5.PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*
*6.THITHI ~ THIRIDHIAI UPTO 12.04 PM. AFTERWARDS CHATURTHTHI*
*SRAARTHATHITHI.~ CHATURTHTHI .*
*7. DAY ~ SUNDAY ( BHANU VAASARAM).*
*8.NAKSHATHRM ~ KETTAI UPTO 08.40 AM. AFTERWARDS MOOLAM.*

*YOGAM ~ NOT GOOD UPTO 08.40 AM. AFTERWARDS SIDHDHA YOGAM .*
*KARANAM ~ BHADHRAM, BHAVAM.*
*RAGU KALAM ~ 04.30 ~ 06.00 PM.*
*YEMAGANDAM ~12.00 ~ 01.30 PM.*
*KULIGAI ~ 03.00 ~ 04.30 PM.*
*GOOD TIME ~ 07.30 AM TO 08.30 AM. & 03.00 PM ~ 04.00 PM.*
*SUN RISE ~ 05.54 AM.*
*SUN SET ~ 06.22 PM*
*CHANDRAASHTAMAM ~ KAARTHIGAI.*
*SOOLAM ~ WEST*
*Parigaram ~ JAGGERY.~~~~~~~ TODAY~ SANKADA HARA CHATURTHTHI .* 🙏🙏

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை 🔔🔔

6-7. சூரியன்.👈 அசுபம்.❌

7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
8-9.. புதன். 💚 👈சுபம் ✅
9-10.. சந்திரன்.💚 👈சுபம் ✅
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✅

பிற்பகல் 💚💚

12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌

1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
3-4. புதன். 💚 👈சுபம் ✅

மாலை 🔔🔔
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✅
5-6 சனி.. ❤👈அசுபம் ❌
6-7 குரு. 💚 👈சுபம் ✅

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உள்ள மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் சற்று குறையும். கணவன்– மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலை சற்று சாதகமாக இருந்தாலும் ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.

கடகம் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை மற்றவர்களை அனுசரித்து செல்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினை தீரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்பட்டாலும் வேலைபளு சற்று குறையும். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளி இடங்களுக்கு பயணம் செல்ல நேரிடும் எனவே எச்சரிக்கை தேவை. உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.

தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

மகரம் மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வருமானம் பெருகும். இதுவரை இருந்து வந்த மறைமுக பிரச்சினைகள் விலகி அனுகூலமான பலன்களை அடைவீர்கள். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். எதிர்பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.

கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு நற்பலனை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். கணவன்-மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள்.

மீனம் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு, வாகனம் போன்றவற்றால் விரயங்கள் உண்டாகலாம். கொடுக்கல்-வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம்…

Leave a Comment