இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.12.2019 வியாழக்கிழமை கார்த்திகை – 26 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*கார்த்திகை – 26*
*டிசம்பர் – 12 – ( 2019 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*வ்ருஸ்சிக*
*ஸுக்ல*
*பௌர்ணமி ( 13.9 ) ( 11:37am )*
&
*க்ருஷ்ண*
*ப்ரதமை*
*குரு*
*ரோஹிணி ( 3.11 ) ( 07:37am )*
&
*மிருகசீரிஷம்*
*ஸாத்ய யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ப்ரதமை*

_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு டிசம்பர் 10 ந்தேதி காலை 11:46 மணி முதல் டிசம்பர் 12 ந்தேதி இரவு 07:22 மணி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:25am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:47pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:25pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – பாஞ்சராத்ர தீபம்*_
_*( கோவில் திருக்கார்த்திகை )*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் தக்த யோகம்*_

 

🕉🔔🔔🔔🕉👳🏻‍♂🕉🔔🔔🔔🕉

 

மேஷம்

மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதியபாதை தெரியும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவரை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால், அரவணைத்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம்.

சிம்மம்

சிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சுற்றத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில், வாடிக் கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

கன்னி

கன்னி: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில், திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால், கோபப்படாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள்.

தனுசு

தனுசு: உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கப்பலமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்

மகரம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மீனம்

மீனம்: பழைய பிரச்னைகளுக்கு சுமுகமாக தீர்வுக் காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக் குறையால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேலை அமையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்…

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

Leave a Comment