இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.2.2020 புதன்கிழமை தை – 29 | Today rasi palan

 

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*தை – 29*
*பிப்ரவரி – 12 – ( 2020 )*
*புதன்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*த்ருதீயை ( 1.33 ) ( 07:07am )*
&
*சதுர்த்தி ( 54.7 )*
*ஸௌம்ய*
*உத்திரம் ( 28.17 ) ( 05:55pm )*
&
*ஹஸ்தம்*
*அதிகண்ட யோகம்*
*பத்ரை கரணம் ( 1.33 ) ( 07:07am )*
&
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_

_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*கும்ப ராசி* க்கு பிப்ரவரி 11 ந்தேதி இரவு 10:54 மணி முதல் பிப்ரவரி 13 ந்தேதி நடு இரவு 01:17 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:43am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:15pm*_

_*ராகு காலம் – 12:00noon to 01:30pm*_

_*யமகண்டம் – 07:30am to 09:00am*_

_*குளிகன் – 10:30am to 12:00noon*_

_*வார சூலை – வடக்கு , வடகிழக்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 01:07pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம்*_
_*ஸங்கடஹர சதுர்த்தி*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸித்த யோகம் – அமிர்த யோகம்*_

மேஷம்

மேஷம்: பணவரவு திருப்தி அளிக் கும். அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: வருங்காலத்திற்கு தேவையான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டா கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவு வார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன்பிரச்சினைகளை தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வாகனச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்  நிம்மதி உண்டு. எதிர்பார்ப்பு கள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

கடகம்: விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் தரக்குறைவாக பேச வேண்டாம். புதிய தொடர்புகளால் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிக ரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வீண் பதட்டத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் எந்த விஷயத்திலும் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் உண்டாகும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வு  மனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கனி வாக பேசுங்கள். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச் சலுடன் ஆதாயம் தரும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் நீண்டநாள்  ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெற்றோர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில உதவிகளைச் செய்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: மனதை கட்டுப்படுத்தி காரி யமே கண்ணாக செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயமுண்டு. செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங் களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்த னையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியா பாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நல்ல மாற்றங்கள் நிறைந்த நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சில நேரங்களில் வேண்டா வெறுப்பாக பேசுவீர்கள். விமர் சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். சின்னச் சின்ன அவமானங் கள், பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: திருமண முயற்சிகள் கைகூடும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!