இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.03.2020 வியாழக்கிழமை மாசி – 29 | Today rasi palan

 

*சிவசிவ அன்பேசிவம்🔥🙏 🚩சிவசிவசிவாயநம🚩*

*🐘இன்று சங்கடஹர சதுர்த்தி : விநாயகரை வழிபட மறக்காதீர்கள் !!🐁*

*12-03-2020 – வியாழக்கிழமை*

*மாசி 29*

*விகாரி வருடம் – 2020*

நாள் சிறப்பு

நல்ல நேரம் :

காலை – 10.30 – 11.30

மாலை – 12.30 – 01.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – –

இரவு – 06.30 – 07.30

இராகு – 01.30 – 03.00 PM

குளிகை – 09.00 – 10.30 AM

எமகண்டம் – 06.00 – 07.30 AM

திதி : மாலை 05.02 வரை திருதியை பின்பு சதுர்த்தி

யோகம் : இரவு 09.09 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்

நட்சத்திரம் : இரவு 09.09 வரை சித்திரை பின்பு சுவாதி

லக்ன நேரம்:

மேஷ லக்னம் 08.13 AM முதல் 09.56 AM வரை

ரிஷப லக்னம் 09.57 AM முதல் 11.58 AM வரை

மிதுன லக்னம் 11.59 AM முதல் 02.09 PM வரை

கடக லக்னம் 02.10 PM முதல் 04.19 PM வரை

சிம்ம லக்னம் 04.20 PM முதல் 06.22 PM வரை

கன்னி லக்னம் 06.23 PM முதல் 08.23 PM வரை

துலா லக்னம் 08.24 PM முதல் 10.30 PM வரை

விருச்சிக லக்னம் 10.31 PM முதல் 12.42 AM வரை

தனுசு லக்னம் 12.43 AM முதல் 02.49 AM வரை

மகர லக்னம் 02.50 AM முதல் 04.42 AM வரை

கும்ப லக்னம் 04.43 AM முதல் 06.28 AM வரை

மீன லக்னம் 06.29 AM முதல் 08.08 AM வரை

சுப ஓரைகள்:

அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :

குரு ஓரை 06.01 முதல் 07.00 வரை

சுக்கிர ஓரை 09.01 முதல் 10.00 வரை

புதன் ஓரை 10.01 முதல் 11.00 வரை

பகல் :

குரு ஓரை 01.01 முதல் 02.00 வரை

சுக்கிர ஓரை 04.01 முதல் 05.00 வரை

இரவு :

புதன் ஓரை 05.01 முதல் 06.00 வரை

குரு ஓரை 08.01 முதல் 09.00 வரை

பொதுத்தகவல்:

நாள் – சமநோக்கு நாள்

சூரிய உதயம் – 06.25

சூலம் – தெற்கு

பரிகாரம் – தைலம்

பண்டிகை:

திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம் ஆரம்பம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.

காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.

வழிபாடு:

விநாயகரை வழிபட வினைகள் தீரும்.

விரதாதி விசேஷங்கள் :

சங்கடஹர சதுர்த்தி

சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

புதிய பெயர் வைக்க நல்ல நாள்.

குதிரை வாங்க நல்ல நாள்.

மருந்துகள் தயாரிக்க சிறந்த நாள்.

வேண்டுதலை நிறைவேற்ற நல்ல நாள்.

வரலாற்று நிகழ்வுகள்:

ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம்.

உலக சிறுநீரக தினம்.

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

மேஷம்

மேஷம்: தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று செயல்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். மன நிறைவு தரும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வீண் அலைச்சல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி அடைவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வரவேண்டிய பணத்தை நயமாக வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெரும் நாள்.

மகரம்

மகரம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள் உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பல நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் நிறைந்த நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசுசெய்ய வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமை தேவைப்படும் நாள்

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!