இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 12.9.2019 வியாழக்கிழமை ஆவணி – 26 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_

°°°°°°°°°°°°°°°°°
*ஆவணி – 26*
*செப்டம்பர் – 12 – ( 2019 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*ஸிம்ஹ*
*ஸுக்ல*
*த்ரயோதசி ( 0.43 ) ( 06:08am )*
&
*சதுர்தசி*
*குரு*
*அவிட்டம் ( 31.41 ) ( 06:32pm )*
&
*சதயம்*
*ஸுகர்ம யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்தசி*

_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_

_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._

_*கடக ராசி* க்கு செப்டம்பர் 12 ந்தேதி காலை 05:30 மணி முதல் செப்டம்பர் 14 ந்தேதி மாலை 05:08 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:08am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:20pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:08pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – அனந்த விரதம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸுப யோகம் – தக்த யோகம்*_

மேஷம்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம்
உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

சிம்மம்

சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

துலாம்

துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு

தனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

மகரம்

மகரம்: கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட
இடத்தில் உதவிகள் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து
நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்

மீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!