இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை – 29 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*கார்த்திகை – 29*
*டிசம்பர் – 15 – ( 2019 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*வ்ருஸ்சிக*
*க்ருஷ்ண*
*த்ருதீயை ( 6.4 ) ( 08:49am )*
&
*சதுர்த்தி*
*பானு*
*புனர்பூசம் ( 1.10 ) ( 06:49am )*
&
*பூசம் ( 57.29 )*
*ப்ராம்ம யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – தனுசு ராசி*_

_மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை ._

_*தனுசு ராசி* க்கு டிசம்பர் 14 ந்தேதி நடு இரவு 12:44 மணி முதல் டிசம்பர் 16 ந்தேதி வரை. பிறகு *மகர ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:25am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:47pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:13am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம்*_
_*ஸங்கடஹர சதுர்த்தி*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*ஸுப யோகம் – அமிர்த யோகம் – ஸுப யோகம்*_

*

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும் பழைய கடனைத் தீர்க்கமுயற்சி செய்வீர்கள். வீடு வாகனப்பராமரிப்புச் செலவுகள்  அதிகமாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள் அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசால் ஆதாயம் உண்டு வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள் உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள் வெற்றிபெறும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகி மகிழ்ச்சி பொங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும் புதியவர்களின் நட்பு கிடைக்கும் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள் வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் உற்சாகமான நாள்

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும் குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள் உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செல்வது நல்லது இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: எடுத்த காரியங்கள் அனைத்திலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். சில விஷயங்களை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

கன்னி

கன்னி: உங்களை சுற்றி இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள் நல்லவை நடக்கும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் எண்ணங்களை செயலாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கிதுடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதிகிடைக்கும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில் அமைதியான  சூழல் உருவாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சாலைகளை கவனமாக கடந்துச்செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்

மகரம்

மகரம்: கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள் உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் ஆதாயமுண்டு. வழக்கில் தீர்ப்பு சாதகமாகவரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.

மீனம்

மீனம்: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும் பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிறப்புகளை புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!