இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை பங்குனி – 2 | Today rasi palan

*சிவசிவ அன்பேசிவம்🔥🙏 🚩சிவசிவசிவாயநம🚩*

*இன்றைய தினத்தில் புதுப்பொலிவுடன்… என்ன செய்யலாம்?*

*15-03-2020 – ஞாயிற்றுக்கிழமை*

*பங்குனி 02*

*விகாரி வருடம் – 2020*

நாள் சிறப்பு.

நல்ல நேரம் :

காலை – 07.30 – 08.30
மாலை – 03.30 – 04.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – 10.30 – 11.30
இரவு – 01.30 – 02.30

இராகு – 04.30 – 06.00 PM

குளிகை – 03.00 – 04.30 PM

எமகண்டம் – 12.00 – 01.30 PM

திதி : காலை 11.17 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம் : காலை 06.22 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்

நட்சத்திரம் : மாலை 05.37 வரை அனுஷம் பின்பு கேட்டை

லக்ன நேரம்:

மேஷ லக்னம் 08.01 AM முதல் 09.44 AM வரை

ரிஷப லக்னம் 09.45 AM முதல் 11.46 AM வரை

மிதுன லக்னம் 11.47 AM முதல் 01.58 PM வரை

கடக லக்னம் 01.59 PM முதல் 04.07 PM வரை

சிம்ம லக்னம் 04.08 PM முதல் 06.10 PM வரை

கன்னி லக்னம் 06.11 PM முதல் 08.11 PM வரை

துலா லக்னம் 08.12 PM முதல் 10.18 PM வரை

விருச்சிக லக்னம் 10.19 PM முதல் 12.30 AM வரை

தனுசு லக்னம் 12.31 AM முதல் 02.37 AM வரை

மகர லக்னம் 02.38 AM முதல் 04.31 AM வரை

கும்ப லக்னம் 04.32 AM முதல் 06.12 AM வரை

மீன லக்னம் 06.13 AM முதல் 07.56 AM வரை

சுப ஓரைகள்:

அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.

காலை :

சுக்கிரன் ஓரை 07.01 முதல் 08.00 வரை

புதன் ஓரை 08.01 முதல் 09.00 வரை

குரு ஓரை 11.01 முதல் 12.00 வரை

பகல் :

சுக்கிரன் ஓரை 02.01 முதல் 03.00 வரை

புதன் ஓரை 03.01 முதல் 04.00 வரை

இரவு :

குரு ஓரை 06.01 முதல் 07.00 வரை
பொதுத்தகவல்
நாள் – சமநோக்கு நாள்

சூரிய உதயம் – 06.23

சூலம் – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

பண்டிகை:

உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி கருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அம்ச வாகனத்திலும் வீதி உலா.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரத்தில் பவனி.

திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் புறப்பாடு.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

வழிபாடு:

சிவபெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

மாங்கல்யம் செய்ய நல்ல நாள்.

ஆபரணம் வாங்க சிறந்த நாள்.

புதிய மனை பார்க்க நல்ல நாள்.

அபிஷேகம் செய்ய ஏற்ற நாள்.

வரலாற்று நிகழ்வுகள்:

உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.

*🙏திருச்சிற்றம்பலம்🙏*

இன்றைய ராசிபலன்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறு சிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் பெறுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட் டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அனாவசியசெலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திவரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவிதகவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் அது பிரச்னையில் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் உயர் அதிகாரியை பற்றி விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல் பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர பகை வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் போராடும் சூழல் உண்டாகும். உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீகள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

கும்பம்

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

 

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

Leave a Comment