இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.2.2020 ஞாயிற்றுக்கிழமை மாசி – 4 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 04*
*பிப்ரவரி – 16 – ( 2020 )*
*ஞாயிற்றுக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*க்ருஷ்ண*
*அஷ்டமி ( 35.33 ) ( 08:41pm )*
&
*நவமி*
*பானு*
*விசாகம் ( 10.3 ) ( 10:41am )*
&
*அனுஷம்*
*த்ருவ யோகம்*
*பாலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – அஷ்டமி*

_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_

_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._

_*மேஷ ராசி* க்கு பிப்ரவரி 16 ந்தேதி அதிகாலை 04:18 மணி முதல் பிப்ரவரி 18 ந்தேதி காலை 08:44 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:41am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_

_*ராகு காலம் – 04:30pm to 06:00pm*_

_*யமகண்டம் – 12:00noon to 01:30pm*_

_*குளிகன் – 03:00pm to 04:30pm*_

_*வார சூலை – மேற்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:29am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் வர்ஜ யோகம்*_

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீண் கோபத்தை தவிர்க்கவும். உங்களுடைய பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டு. வீட்டு வசதிகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

மிதுனம்

மிதுனம்: எந்த விஷயத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காண்பீர்கள். உறவினர்களின் அன்பும் ஆதரவும் உண்டு.காதல் விஷயங்களில் வெற்றி ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சூழ்நிலைகளை சரியாக புரிந்துகொண்டு செயல்களில் இறங்குவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புனித யாத்திரையை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பு மரியாதை உயரும். நிம்மதி கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் தவறுகளை உணர்ந்து சரியான பாதையை தேர்ந்தெடுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சாட்சிக் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். மற்ற மதத்தவர்களால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

மீனம்

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இதுவரை இருந்த தடைகள் விலகும். புனிதஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விஷயமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.

Leave a Comment