இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.03.2020 திங்கட்கிழமை பங்குனி – 3 | Today rasi palan

திங்கட்கிழமை !

விகாரி வருடம் : பங்குனி மாதம் :

03 ஆம் தேதி..

மார்ச் மாதம் : 16 ஆம் தேதி !
(16-03-2020)

சூரிய உதயம் :
காலை : 06-23 மணி அளவில் !
( மீன லக்கனம்)

இன்றைய திதி : தேய்பிறை :
அஷ்டமி !!

ஸப்தமி…
காலை 09-51மணி வரை ! அதன் பிறகு அஷ்டமி !!

இன்றைய நட்சத்திரம் :
கேட்டை !

கேட்டை..
மாலை 05-07 மணி வரை அதன் பிறகு மூலம் !!

யோகம் :
சித்தயோகம் ! அமிர்தயோகம் !!

நல்ல நேரம் :

காலை : 06-30 மணி முதல் 07-30 மணி வரை !!
09-30 மணி முதல் 10-30 மணி வரை !!

இரவு : 07-30 மணி முதல் 08-30 மணி வரை !!

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 012-00 மணி முதல் 01-00 மணி வரை !!

நாள் :

இன்றும்
சம நோக்கு நாள் !!

சந்திராஷ்டமம் :

இன்று
மேஷ ராசிக்கு மாலை சுமார் 05-00 மணி வரை சந்திராஷ்டமம் !

அதன் பிறகு ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
சோம வாரம் !

இன்று
தேய்பிறை அஷ்டமி !

இன்று
அஷ்டமி விரதம் !

இன்று
அஷ்டமி பிரதக்ஷணம் !!

இன்று
மாலை கால பைரவரை வழிபட வேண்டிய நாள் !

இன்று
மாலை அனைத்து சிவாலயங்களிலும் உள்ள கால பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெறும் !

நாய் வாகனம் கொண்ட கடவுள் கால பைரவர்..!

தேய்பிறை அஷ்டமி வழிபாடு என்பது
மரண பயத்தை நீக்கும் அற்புதமான
வழிபாடு !

கால பைரவர் வழிபாடு என்பது நமது முன்னோர்கள் காலம் தொட்டு வழி வழியாக பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு வழிபாட்டு நடைமுறை !

சனீஸ்வரனின்
குருவாகவும்,காலத்தை கட்டுப்படுத்திடும்
தேவனாகவும் இருப்பவர் பைரவர்..!

12 ராசிகள்..அஷ்டதிக்குகள் பஞ்சபூதங்கள்..நவகிரகங்கள் அடக்கம்..!

சிவபகவானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று..!

ஸ்ரீ பைரவர் அவதாரமும் 64 வகைகள் உண்டு பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.!

தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும்..

மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும்..

இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும்..

பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும்..

முனங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும்..

காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளதாக ஐதீகம்..!!

எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் கால பைரவர் ..!

ஒட்டு மொத்த காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர் !

இன்று
மாலை கால பைரவர் வழிபாடு செய்ய வேண்டிய நாள் !!

*கால பைரவர் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !!*

இன்றைய (16-03-2020) ராசி பலன்கள்

மேஷம்

வெளிநாட்டு பயணங்களால் தனலாபம் உண்டாகும். செய்யும் முயற்சிகளால் திருப்தியான சூழல் ஏற்படும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். சில முக்கியமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : தனலாபம் உண்டாகும்.

பரணி : திருப்தியான நாள்.

கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
—————————————

ரிஷபம்

வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் கனிவாக பேசவும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : செலவுகள் அதிகரிக்கும்.

ரோகிணி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
—————————————

மிதுனம்

உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : நட்பு கிடைக்கும்.

திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
—————————————

கடகம்

நண்பர்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். இளைய சகோதரர்களால் சுபவிரயம் ஏற்படும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் நேரிடலாம். எதையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : அனுகூலமான நாள்.

பூசம் : திறமைகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : நன்மை உண்டாகும்.
—————————————

சிம்மம்

ஆகாய மார்க்கப் பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். உடல் சோர்வு வந்து நீங்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வுக்கான வாய்ப்புகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : புகழப்படுவார்கள்.

பூரம் : ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
—————————————

கன்னி

மனதில் நினைத்த காரியங்கள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு, உதவியால் உங்கள் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.

அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சித்திரை : செல்வாக்கு மேம்படும்.
—————————————

துலாம்

உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் செல்வாக்கு உயரும். திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும். எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சுவாதி : செல்வாக்கு உயரும்.

விசாகம் : வெற்றி கிடைக்கும்.
—————————————

விருச்சகம்

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். எதிர்காலம் கருதி திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

அனுஷம் : இலாபம் அதிகரிக்கும்.

கேட்டை : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
—————————————

தனுசு

சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். இழுபறியான செயல்களை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். தம்பதியர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறைவேறும்

மூலம் : இலாபம் அடைவீர்கள்.

பூராடம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
—————————————

மகரம்

உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————

கும்பம்

மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். இழுபறியாக இருந்துவந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீட்டு பராமரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சகோதரருடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : பதற்றம் நீங்கும்.

சதயம் : இடமாற்றம் சாதகமாகும்.

பூரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
—————————————

மீனம்

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மேன்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். அயல்நாட்டு வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.

உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.

ரேவதி : நிதானம் வேண்டும்.
—————————————

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!