இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.07.2019 செவ்வாய்க்கிழமை ஆனி 31 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆனி – 31*
*ஜூலை – 16 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*க்ரீஷ்ம*
*மிதுன*
*ஸுக்ல*
*பௌர்ணமி ( 54.9 )*
*பௌம*
*பூராடம் ( 39.39 ) ( 09:36pm )*
&
*உத்திராடம்*
*வைத்ருதி யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*

_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு ஜூலை 14 ந்தேதி இரவு 07:34 மணி முதல் ஜூலை 16 ந்தேதி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:00am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:38pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:48am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – வ்யாஸ பூஜை*_
_*குரு பூர்ணிமா*_
_*சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்*_
&
_*சந்திர க்ரஹணம்*_

_*குறிப்பு :- கேது க்ரஸ்த்த பூர்ண சந்திர கிரஹணம் உத்திராடம் நக்ஷத்திரத்தில் பிடிக்கிறது.*_

_*சந்திர கிரஹணம்*_

_*நடுஇரவு – 01 மணி 32 நிமிடத்திற்கு க்ரஹணம் ஆரம்பிக்கிறது.*_

_*இரவு – 03 மணி 02 நிமிடத்திற்கு மத்திம காலத்தை அடைகிறது.*_

_*அதிகாலை – 04 மணி 30 நிமிடத்திற்கு க்ரஹணம் முடிகிறது.*_

_*மொத்த சந்திர க்ரஹண காலம் -*_

_*02 மணிநேரம் 58 நிமிடங்கள்.*_

*சாந்தி செய்து கொள்ள வேண்டிய நக்ஷத்திரங்கள் -*

_*கார்த்திகை , உத்திரம் , பூராடம் , உத்திராடம் , திருவோணம்.*_

_*மாலை 04:32 மணிக்குள் போஜனம் செய்ய வேண்டும்.*_

_*பௌர்ணமி திதி ஸ்ராத்தம் ஆனி மாதம் 02 ந்தேதி ( 17 – 06 – 2019 ) திங்கட்கிழமை அன்றே செய்ய வேண்டியது.*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*ஸுப யோகம் – நாஸ யோகம்*_

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமை யை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க   வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். போராட்டமான நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவு வார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார் கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

சிம்மம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

கன்னி

கன்னி: முக்கிய பிரமுகர்களைசந்திப்பீர்கள். தாய்வழி உறவி னர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பாதியில் நின்ற வேலைகள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார் கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து விலகும். கவனம்தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

மீனம்

மீனம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!