இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.1.2020 வெள்ளிக்கிழமை தை – 3 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*தை – 03*
*ஜனவரி – 17 – ( 2020 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*ஸப்தமி ( 12.7 ) ( 11:30am )*
&
*அஷ்டமி*
*ப்ருகு*
*சித்திரை ( 55.53 )*
*ஸுகர்ம யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – அஷ்டமி*

_*சந்திராஷ்டமம் – கும்ப ராசி*_

_அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*கும்ப ராசி* க்கு ஜனவரி 15 ந்தேதி மதியம் 02:42 மணி முதல் ஜனவரி 17 ந்தேதி மாலை 05:06 மணி வரை. பிறகு *மீன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:42am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:06pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:30am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – கரிநாள்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

மேஷம்

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: வருங்காலத்தை மனதில் வைத்து புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அண்டை அயலாரின் ஆதரவு இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத வேலைகள் முடியும். தாயாருடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள் வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தைரியமாகவும் தன்னிச்சையாகவும் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

துலாம்

துலாம்: சந்திரன் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம் மற்றும் கவலை வந்து போகும். கணவன் மனைவிக்குள் சிறு மனஸ்தாபங்கள் வந்து நிங்கும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். வளைந்து கொடுத்துப் போக வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப்பிரச்னைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எடுத்த காரியத்தில் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் மதிப்பு அதிகரிக்கும். நல்ல செய்திகள் தேடி வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றிய நல்ல
இமேஜ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வெற்றி கிடைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது பொருள்கள் வந்து சேரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்க. திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!