இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.08.2019 சனிக்கிழமை ஆடி 32 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 32*
*ஆகஸ்ட் – 17 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*த்விதீயை ( 40.7 ) ( 10:07pm )*
&
*த்ருதீயை*
*ஸ்திர*
*சதயம் ( 20.19 ) ( 02:07pm )*
&
*பூரட்டாதி*
*அதிகண்ட யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*

_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_

_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._

_*கடக ராசி* க்கு ஆகஸ்ட் 15 ந்தேதி இரவு 10:21 மணி முதல் ஆகஸ்ட் 18 ந்தேதி காலை 10:02 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:07am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:35pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:19am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம்*_
_*விஷ்ணுபதி புண்யகாலம்*_

_*ஸிம்ம ரவி*_
_*( 42.23 ) ( 10:55pm )*_
_( 17 – 08 – 2019 )_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*அமிர்த யோகம் – ஸுப யோகம்*_

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
சனிக்கிழமை ஹோரை
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤘
காலை 🔔🔔

6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✔
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
11-12. புதன். 💚 👈சுபம் ✔

பிற்பகல் 🔔🔔

12-1. சந்திரன்.💚 👈சுபம் ✔
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✔

மாலை 🔔🔔

3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
6-7. புதன். 💚 👈சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன?

💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

மேஷம்

மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர் கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்டமான நாள்.

துலாம்

துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள்.

மகரம்

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.

மீனம்

மீனம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை, அயலார் சிலரின்
செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.

 

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!