இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.9.2019 செவ்வாய்க்கிழமை ஆவணி – 31 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆவணி – 31*
*செப்டம்பர் – 17 – ( 2019 )*
*செவ்வாய்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*வர்ஷ*
*ஸிம்ஹ*
*க்ருஷ்ண*
*த்ருதீயை ( 23.23 ) ( 03:20pm )*
&
*சதுர்த்தி*
*பௌம*
*அஸ்வினி ( 60.0 )*
*த்ருவ யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – சூன்ய திதி*

_*சந்திராஷ்டமம் – கன்னி ராசி*_

_உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை ._

_*கன்னி ராசி* க்கு செப்டம்பர் 17 ந்தேதி அதிகாலை 04:23 மணி முதல் செப்டம்பர் 19 ந்தேதி மதியம் 01:39 மணி வரை. பிறகு *துலா ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:08am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:20pm*_

_*ராகு காலம் – 03:00pm to 04:30pm*_

_*யமகண்டம் – 09:00am to 10:30am*_

_*குளிகன் – 12:00noon to 01:30pm*_

_*வார சூலை – வடக்கு , வடமேற்கு*_

_*பரிகாரம் – பால்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:56am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம்*_
_*ஸங்கடஹர சதுர்த்தி*_
&
_*ஷடஸீதி புண்யகாலம்*_

_*கன்யா ரவி ( 44.33 )*_
_( 18 – 09 – 2019 )_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன்் நுழைவதால் ஓய்வெடுக்க  முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள்  சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாகும். வியாபா ரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனு சரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக்கொள்ளும் நாள்.

கடகம்

கடகம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை
சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியான நாள்.

கன்னி

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். சிறுசிறுஅவமானமும் ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிக்கும்.
வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல்சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில்ஒற்றுமை பலப்படும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும்பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்புகிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய
பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

மகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்றநிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவுபிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால்லாபத்தை அதிகரிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!