இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.12.2019 புதன்கிழமை மார்கழி – 2 | Today rasi palan

🕉 ஶிவ Shiva 🕉 🕉ராம Raama 🕉

*புதன் / Wednesday*
*{18 – December – 2019}*
*மார்கழி 02/ Maarkazhi 02*

*விகாரி நாம ஸம்வத்ஸரம்/*
*Vikaari naama samvathsaram*

*தக்ஷிணாயனம் /Dhakshinaayanam*

*ஹேமந்த றுது / Hemantha R’thu*

*தனுர் மாஸம் /*
*Dhanur Maasam*

*க்ருஷ்ண பக்ஷம்*/
*Kr’shna Paksham*

*ஸப்தமி* / *Sapthami* ~
Up to 00:46 Am (19/12/2019) வரை
பின் *அஷ்டமி* / Then *Ashtami*

*ஸௌம்ய வாஸரம்* /
*Soumya vaasaram*

*பூரம்* / *Pooram* ~
(பூர்வ ஃபல்குனீ /Poorva Phalgunee)
Up to 01:33 Am (19/12/2019) வரை
பின் *உத்ரம்* / Then *Uthram*
(உத்தர ஃபல்குனீ /
Uththara Phalgunee)

_யோகம் /Yogam_
*ப்ரீதி* / *Preethi*
Up to 10:03 Pm வரை
பின் *ஆயுஷ்மான்* /
Then *Aayushmaan*

_கரணம் /Karanam_
*பத்ரை* / *Bhadhrai*
Up to 01:55 Pm வரை
பின் *பவம்* /Then *Bavam*

_ஶ்ராத்த திதி_
*தனு : க்ருஷ்ண ஸப்தமி*

_Shraaddha thithi_
*Dhanu : Kr’shna Sapthami*

அம்ருதாதி யோகம் ~
*ஸித்தம்*

Amr’thaadhi Yogam ~
*Sidhdham*

*ஸூர்ய உதயம்/Sun rise~06:30 Am*
*அஸ்தமயம் /Sun set ~ 05:50 Pm*

நல்ல நேரம்/Favour: time
09:00 – 10:00 Am &
04:45 – 05:45 Pm

ராஹு காலம்/Rahu Kaalam
12:00 – 01:30 Pm

எம கண்டம்/Yema Ghantam
07:30 – 09:00 Am

குளிகை காலம் /Gulikai Kaalam
10:30 – 12:00 Am

வார ஶூலை/ பரிஹாரம் ~
*வடக்கு / பால்*

Vaara Shoolai /Remedy ~
*North /Milk*

சந்த்ராஷ்டமம் /Chandhraashtamam
*மகரம்* / *Makaram*

இன்று ~
*திஸ்ரோஷ்டகம்*
**

Today ~
*Thisroshtakam*
**

🕉 ஶுபமஸ்து 🕉
🕉 Shubhamasthu 🕉

*பஞ்சாங்கம்~~Panchaangam*

மேஷம்

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்திகள் வரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.வராது என்றிருந்த பணம் கைக்குவந்து சேரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் உற்சாகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு கஷ்டப்படாதீர்கள். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் குறைவாக பேச வேண்டாம். மற்றவர்களுடைய விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும் நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளைக் கடிந்துக்கொள்ள வேண்டாம். வாகனங்களால் விரையங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

துலாம்

துலாம்: முடிக்க முடியாத விஷயங்களை எளிதாக முடித்து விடுவீர்கள். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள் உத்தியோகத்தில் உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தெளிவான மனநிலையில் சிந்தித்து நன்றாக செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்பு களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகளை முறியடிக்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பணப் புழக்கம் கணிசமாக உயரும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத் தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது வாய்ப்புகள்தேடி வரும் மனசாட்சி படி செயல்படும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வேண்டாவெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத் தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். வீண்கோபத்தை தவிர்க்கவும். சின்னசின்ன அவமானங்கள் ஏற்படலாம். வியாபாரத் தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மொத்தத்தில் அமைதியாக இருப்பது நல்லது. வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

கும்பம்

கும்பம்: உங்களை சுய பரிசோதனை செய்து மேம்படுத்தி கொள்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

மீனம்: போட்டிகளில் வெற்றி உண்டாகும். தேவையான அளவு பொருளாதார நிலை உயரும். சின்னசின்ன அவமானங்கள் ஏற்படும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும் வியாபாரத்தில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும் உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!