இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 19.10.2019 சனிக்கிழமை ஐப்பசி – 2 | Today rasi palan

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉*.

*🚩பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்*

*ஐப்பசி ~ 02*

*{19.10.2019} *சனிக்கிழமை*.

*வருடம்*~ விகாரி வருடம். (விகாரிநாம சம்வத்ஸரம்}

*அயனம்*~ தக்ஷிணாயணம்.

*ருது*~ ஸரத் ருதௌ.

*மாதம் ~ ஐப்பசி ( துலா மாஸம்)*.

*பக்ஷம்*~ *கிருஷ்ண பக்ஷம்*

*திதி ~ ஷஷ்டி.*

*ஸ்ரார்த்த திதி ~ ஷஷ்டி.*

*நாள்* ~~ சனிக்கிழமை. {ஸ்திர வாஸரம் } ~~~~~~~

*நக்ஷத்திரம் ~ மிருகஸீர்ஷம் மாலை 04.07 PM. வரை. பிறகு திருவாதிரை.*

*யோகம்~ சித்த யோகம்*

*கரணம்~ கரஜை, வணிஜை.*.

*நல்ல நேரம்*~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM.

*ராகு காலம்*~ காலை 09.00 ~ 10.30 AM .

*எமகண்டம்*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM

*குளிகை*~ காலை 06.00 ~ 07.30 AM.

*சூரிய உதயம்*~ காலை 06.02 AM.

*சூரிய அஸ்தமனம்*~ மாலை 05.44 PM.

*சூலம்*~ கிழக்கு .

*பரிகாரம்*~ தயிர்.

*🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩*

*🔯மேஷம் ராசி*

பதவி உயர்விற்கான முயற்சியில் நிதானம் வேண்டும். சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்கள் உண்டாகும். பணி செய்யும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிறரிடம் வேலைகளை கொடுக்காமல் தாங்களே முடிப்பது சிறப்பு.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : நிதானம் வேண்டும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : பணிகளில் கவனம் தேவை.

*🔯ரிஷபம் ராசி*

குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடல் மார்க்க செய்திகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்களும், அபிவிருத்திக்கான முயற்சிகளும் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.

*🔯மிதுனம் ராசி*

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அமைதியாக நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் கலந்துரையாடுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : அமைதி வேண்டும்.
திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.

*🔯கடகம் ராசி*

புத்திரர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். பூர்வீகச் சொத்துக்களால் தனவிரயம் உண்டாகும். சகோதரர்களின் மூலம் சாதகமான சூழல் நிலவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும்.

*🔯சிம்மம் ராசி*

கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரம் : உதவிகள் சாதகமாகும்.
உத்திரம் : மேன்மையான நாள்.

*🔯கன்னி ராசி*

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். மனைவியின் உறவுகளிடம் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளால் சுப விரயம் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : இன்பமான நாள்.
அஸ்தம் : அபிவிருத்தி உண்டாகும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.

*🔯துலாம் ராசி*

செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை, மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவிக்கான சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : பாராட்டப்படுவீர்கள்.
சுவாதி : உறவுகள் மேம்படும்.
விசாகம் : சாதகமான நாள்.

*🔯விருச்சகம் ராசி*

உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பொதுக்கூட்டப் பேச்சில் ஈடுபடுபவர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் நேரிடலாம். தொழில்வகை அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

*🔯தனுசு ராசி*

வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : சிந்தனைகள் மேலோங்கும்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.

*🔯மகரம் ராசி*

புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
திருவோணம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.

*🔯கும்பம் ராசி*

குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். புதிய முயற்சியில் சாதகமான சூழல் அமையும். மாணவா்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். பணிபுரிபவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
பூரட்டாதி : சோர்வு உண்டாகும்.

*🔯மீனம் ராசி*

எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பங்காளிகளால் ஏற்பட்ட வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : சேமிப்பு உயரும்.
ரேவதி : இன்னல்கள் குறையும்.

Leave a Comment