இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 19.07.2019 வெள்ளிக்கிழமை ஆடி 3 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஆடி – 03*
*ஜூலை – 19 – ( 2019 )*
*வெள்ளிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*க்ரீஷ்ம*
*கர்கடக*
*க்ருஷ்ண*
*த்விதீயை ( 1.34 ) ( 06.27am )*
&
*த்ருதீயை*
*ப்ருகு*
*அவிட்டம் ( 55.58 )*
*ஆயுஷ்மான் யோகம்*
*கரஜை கரணம் ( 1.34 ) ( 06.27am )*
&
*வணிஜை கரணம்*
*ஸ்ராத்த திதி – த்ருதீயை*

_*சந்திராஷ்டமம் – மிதுன ராசி*_

_மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*மிதுன ராசி* க்கு ஜூலை 17 ந்தேதி காலை 04:19 மணி முதல் ஜூலை 19 ந்தேதி மதியம் 03:10 மணி வரை. பிறகு *கடக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:03am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:39pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:51am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம் -*
_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_

 

இன்றைய ராசிபலன்
7/19/2019
இன்றைய ராசிபலன்
மேஷம்

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டு மென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

கடகம்

கடகம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர் களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

துலாம்

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மகரம்

மகரம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ.ஜெயந்தி

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!