இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 2.11.2019 சனிக்கிழமை ஐப்பசி – 16 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*ஐப்பசி – 16*
*நவம்பர் – 02 – ( 2019 )*
*சனிக்கிழமை*
*விகாரி*
*தக்ஷிணாயனே*
*ஸரத்*
*துலா*
*ஸுக்ல*
*ஷஷ்டி ( 58.21 )*
*ஸ்திர*
*பூராடம் ( 53.13 )*
*ஸுகர்ம யோகம்*
*கௌலவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஷஷ்டி*

_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு அக்டோபர் 31 ந்தேதி நடு இரவு 01:54 மணி முதல் நவம்பர் 03 ந்தேதி காலை 09:38 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 05:49pm*_

_*ராகு காலம் – 09:00am to 10:30am*_

_*யமகண்டம் – 01:30pm to 03:00pm*_

_*குளிகன் – 06:00am to 07:30am*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:21am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஷஷ்டி விரதம்*_
_*ஸ்கந்த ஷஷ்டி*_
&
_*சூர ஸம்ஹாரம்*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் மரண யோகம்*_

02/11/2019 இன்றைய
⚜ராசி பலன்கள்⚜�

*🔯மேஷம் ராசி*

கௌரவ பதவிகள் தேடி வரும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீர்வழி தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.

*🔯ரிஷபம் ராசி*

உயர்ந்த பொருட்களை கவனமாக கையாள வேண்டும். சம வயதினரிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணங்களில் தேவையான ஆவணங்களை மட்டும் கொண்டு செல்லவும். புதிய சிந்தனைகளும், குழப்பமும் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் மலரும்.

*🔯மிதுனம் ராசி*

சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளால் சில காரியத்தடங்கல்கள் உண்டாகும். சாஸ்திர அறிவுகளில் மேன்மை உண்டாகும். வெளிநாட்டு பயணங்களில் சில மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.

*🔯கடகம் ராசி*

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். மனதில் புது விதமான தேடல் பிறக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாசனைத் திரவிய தொழிலில் எண்ணிய லாபம் உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.
பூசம் : தேடல் பிறக்கும்.
ஆயில்யம் : ஆரோக்கியம் மேம்படும்.

*🔯சிம்மம் ராசி*

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சுயதொழில் முனைவதற்கான முயற்சிகள் கைகூடும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரம் : காரியசித்தி உண்டாகும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

*🔯கன்னி ராசி*

பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். சேமிப்புகள் அதிகரிக்கும். தலைமை அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : ஆதரவான நாள்.

*🔯துலாம் ராசி*

புதிய எண்ணங்களுக்கு செயல்திட்டமிட்டு அதனை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான சாதகமான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் நல்லதொரு சகாயம் உண்டாகும். போட்டியில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : வெற்றி கிடைக்கும்.

*🔯விருச்சகம் ராசி*

புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனமகிழ்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். மனத்திற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

*🔯தனுசு ராசி*

குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேற்கொள்வீர்கள். வாக்குத்திறமையால் இலாபம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : ஒற்றுமை பிறக்கும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.

*🔯மகரம் ராசி*

வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். கலைஞர்கள் சற்று கவனமாக செயல்பட்டால் தேவையற்ற வீண் அவச்சொற்களை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : முடிவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.

*🔯கும்பம் ராசி*

மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். ஆபரண, அணிகலன்களின் சேர்க்கை உண்டாகும். கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*🔯மீனம் ராசி*

தைரியத்துடன் புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

 

Leave a Comment