இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 2.3.2020 திங்கட்கிழமை மாசி – 19 | Today rasi palan

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*02-03-2020 -* *திங்கட்கிழமை*
*மாசி 19*
*விகாரி வருடம் – 2020*

*நாள் சிறப்பு*

*நல்ல நேரம் :-*

*காலை -* 06.30 – 07.30
*மாலை -* 04.30 – 05.30

*கௌரி நல்ல நேரம் :-*

*பகல் -* 09.30 – 10.30
*இரவு -* 07.30 – 08.30

*இராகு -* 07.30 – 09.00 யுஆ

*குளிகை -* 01.30 – 03.00 Pஆ

*எமகண்டம் -* 10.30 யுஆ – 12.00 Pஆ

*திதி :-* காலை 09.14 வரை சப்தமி பின்பு அஷ்டமி

*யோகம் :-* அதிகாலை 05.42 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

*நட்சத்திரம் :-* அதிகாலை 05.42 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்

*லக்ன நேரம்*

*மேஷ லக்னம்:-* 08.52 யுஆ முதல் 10.35 யுஆ வரை

*ரிஷப லக்னம்:-* 10.36 யுஆ முதல் 12.37 Pஆ வரை

*மிதுன லக்னம்:-* 12.38 Pஆ முதல் 02.49 Pஆ வரை

*கடக லக்னம்:-* 02.50 Pஆ முதல் 04.58 Pஆ வரை

*சிம்ம லக்னம்:-* 04.59 Pஆ முதல் 07.01 Pஆ வரை

*கன்னி லக்னம்:-* 07.02 Pஆ முதல் 09.03 Pஆ வரை

*துலா லக்னம்:-* 09.04 Pஆ முதல் 11.09 Pஆ வரை

*விருச்சிக லக்னம்:-* 11.10 Pஆ முதல் 01.21 யுஆ வரை

*தனுசு லக்னம்:-* 01.22 யுஆ முதல் 03.28 யுஆ வரை

*மகர லக்னம்:-* 03.29 யுஆ முதல் 05.22 யுஆ வரை

*கும்ப லக்னம்:-* 05.23 யுஆ முதல் 07.07 யுஆ வரை

*மீன லக்னம்:-* 07.08 யுஆ முதல் 08.47 யுஆ வரை

*சுப ஓரைகள்*

*காலை :-*

*சந்திரன் ஓரை:-* 06.01 முதல் 07.00 வரை

*குரு ஓரை:-* 08.01 முதல் 09.00 வரை

*சுக்கிரன் ஓரை:-* 11.01 முதல் 12.00 வரை

*பகல் :-*

*புதன் ஓரை:-* 12.01 முதல் 01.00 வரை

*சந்திரன் ஓரை:-* 01.01 முதல் 02.00 வரை

*குரு ஓரை:-* 03.01 முதல் 04.00 வரை

*இரவு :-*

*சுக்கிரன் ஓரை:-* 06.01 முதல் 07.00 வரை

*புதன் ஓரை:-* 07.01 முதல் 08.00 வரை

*சந்திரன் ஓரை:-* 08.01 முதல் 09.00 வரை

*பொதுத்தகவல்*

*நாள் -* மேல்நோக்கு நாள்

*சூரிய உதயம் -* 06.28

*சூலம் -* கிழக்கு

*பரிகாரம் -* தயிர்

*பண்டிகை*

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.

கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.

காரமடை அரங்கநாதர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
வழிபாடு
காலபைரவரை வழிபட காரியத்தடைகள் அகலும்.

*விரதாதி விசேஷங்கள் :-*

அஷ்டமி
எதற்கெல்லாம் சிறப்பு?
பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள்.

விருந்துண்ணுவதற்கு ஏற்ற நாள்.

கிணறு வெட்டுவதற்கு உகந்த நாள்.

புதிய ஆடைகளை அணிய சிறந்த நாள்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களாலும் ஆதாய முண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறு களை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எரிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி வியப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும். உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிட்டும். நன்மை கிட்டும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்திவரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

Leave a Comment