இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 20.1.2020 திங்கட்கிழமை தை – 6 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*தை – 06*
*ஜனவரி – 20 – ( 2020 )*
*திங்கட்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஹேமந்த*
*மகர*
*க்ருஷ்ண*
*ஏகாதசி ( 54.12 )*
*இந்து*
*அனுஷம் ( 48.4 )*
*கண்ட யோகம்*
*பவ கரணம்*
*ஸ்ராத்த திதி – ஏகாதசி*

_*சந்திராஷ்டமம் – மேஷ ராசி*_

_அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை ._

_*மேஷ ராசி* க்கு ஜனவரி 19 ந்தேதி இரவு 08:14 மணி முதல் ஜனவரி 21 ந்தேதி நடு இரவு 12:54 மணி வரை. பிறகு *ருஷப ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:42am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:06pm*_

_*ராகு காலம் – 07:30am to 09:00am*_

_*யமகண்டம் – 10:30am to 12:00noon*_

_*குளிகன் – 01:30pm to 03:00pm*_

_*வார சூலை – கிழக்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – தயிர்*_

_*குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:54am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

_*தின விசேஷம் – ஸ்மார்த்த ஏகாதசி*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை பற்றி வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மந்தநிலை உருவாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உத்தியோ கத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.

கடகம்

கடகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்கள் பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக் கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி

கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

துலாம்

துலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உற்சாகமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல் பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: உங்கள் காரியங்களை முடிக்க அலைந்து திரியவேண்டி இருக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மகரம்

மகரம்: கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாக பயன்ப்படுத்திக் கெண்டு முன்னேறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தைப் பெருக்க புது வழிகளை யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். லாபம் பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் காரியங்களை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சில முக்கிய நோக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மீனம்

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்…

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!