இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 20.2.2020 வியாழக்கிழமை மாசி – 8 | Today rasi palan

_*பஞ்சாங்கம்*_
°°°°°°°°°°°°°°°°°
*மாசி – 08*
*பிப்ரவரி – 20 – ( 2020 )*
*வியாழக்கிழமை*
*விகாரி*
*உத்தராயணே*
*ஸிஸிர*
*கும்ப*
*க்ருஷ்ண*
*த்வாதசி ( 29.5 ) ( 06:17pm )*
&
*த்ரயோதசி*
*குரு*
*பூராடம் ( 8.6 ) ( 09:53am )*
&
*உத்திராடம்*
*ஸித்தி யோகம்*
*தைதுல கரணம்*
*ஸ்ராத்த திதி – த்வாதசி*

_*சந்திராஷ்டமம் – ருஷப ராசி*_

_கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை ._

_*ரிஷப ராசி* க்கு பிப்ரவரி 18 ந்தேதி காலை 08:44 மணி முதல் பிப்ரவரி 20 ந்தேதி மாலை 03:29 மணி வரை. பிறகு *மிதுன ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:41am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:17pm*_

_*ராகு காலம் – 01:30pm to 03:00pm*_

_*யமகண்டம் – 06:00am to 07:30am*_

_*குளிகன் – 09:00am to 10:30am*_

_*வார சூலை – தெற்கு , தென்கிழக்கு*_

_*பரிகாரம் – தைலம்*_

_*குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:41pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*இன்று முழுவதும் ஸுப யோகம்*_

மேஷம்

மேஷம்: உங்கள் செயல்பாடுகளில் புதிய மாற்றங்கள் ஏற்படும். தடைகள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.தெய்வஅணுகூலம் பெறுவீர்கள். உறவினர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட விஷயங்கள் முழுமையாக முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தேவையற்ற குழப்பங்களும் பிரச்சனைகளும் உருவாகும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கடகம்: அரசு விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும் . அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்கள் அங்கீகரிக்கப்படும். அமோகமான நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை தீட்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர் களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: தாயாருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பால்ய நண்பர்களின் உதவி கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

துலாம்

துலாம்: உங்கள் விடா முயற்சியால் வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தைரியமாக செயல்படும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும் . உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உற்சாகமான நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்கள் செயல்களில் சிறுசிறு தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பேச்சில் கவனம் தேவைப்படும் நாள்.

மகரம்

மகரம்: மறைமுக எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் பெற போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: உங்கள் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையும் உயரதிகாரிகளும் அங்கீகரிக்கப்படும். எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும் நாள்.

மீனம்

மீனம்: உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மனைவி வழியில் தேவையான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உங்கள் அந்தஸ்தும் உயரும் நாள்.

Comments

comments

Leave a Comment

error: Content is protected !!