இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 21.10.2019 திங்கட்கிழமை ஐப்பசி – 4 | Today rasi palan

*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉.*

*🚩பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்*

*ஐப்பசி ~ 04*

*{21.10.2019} திங்கட்கிழமை*.

*வருடம்*~ விகாரி வருடம். { விகாரி நாம சம்வத்ஸரம்}

*அயனம்*~ தக்ஷிணாயணம் .

*ருது*~ ஸரத் ருதௌ.

*மாதம்*~ ஐப்பசி ( துலா மாஸம்)

*பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்.*

*திதி ~ அஷ்டமி*

*ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி.*

*நாள்* ~~ திங்கட்கிழமை {இந்து வாஸரம் } ~~~~~~~

*நக்ஷத்திரம் ~ புனர்பூசம் பிற்பகல் 02.46 PM. வரை. பிறகு பூசம்*

*யோகம் ~ அமிர்த, சித்த யோகம்.*

*கரணம் ~ பாலவம், கௌலவம்.*

*நல்ல நேரம்*~ காலை 06.15 AM ~ 07.15 AM & 04.45 ~ 05.45 PM.

*ராகு காலம்*~ காலை 07.30 AM ~ 09.00.AM.

*எமகண்டம்*~ காலை 10.30 ~12.00 PM.

*குளிகை*~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM.

*சூரிய உதயம்*~ காலை 06.02 AM.

*சூரிய அஸ்தமனம்* ~ மாலை 05.43. PM.

*சூலம்*~ கிழக்கு.

*பரிகாரம்*~ தயிர்

*🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩*

*🔯மேஷம் ராசி*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய நினைவுகளால் மனதில் இருந்துவந்த கவலைகள் மறையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். புதிய நண்பர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருக்கவும். தொழில் தொடர்பான வாய்ப்புகளில் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : கவலைகள் மறையும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

*🔯ரிஷபம் ராசி*

கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சல்களும், பதற்றமும் தோன்றி மறையும். பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : முடிவுகள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*🔯மிதுனம் ராசி*

வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணி உயர்வு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : இலாபம் அதிகரிக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : உயர்வு உண்டாகும்.

*🔯கடகம் ராசி*

போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல் சோர்வும், மன அழுத்தமும் குறையும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : சோர்வு நீங்கும்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : சிந்தனைகள் மலரும்.

*🔯சிம்மம் ராசி*

பிள்ளைகளின் மூலம் பெருமைப்படக்கூடிய செயல்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சிறு தூர பயணங்கள் மனதில் ஒருவிதமான மாற்றத்தை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : பெருமை உண்டாகும்.
பூரம் : சாதகமான சூழல் அமையும்.
உத்திரம் : மாற்றமான நாள்.

*🔯கன்னி ராசி*

வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனக்கவலைகள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திட்டமிட்டு பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

*🔯துலாம் ராசி*

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : கவனத்துடன் இருக்கவும்.
விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

*🔯விருச்சகம் ராசி*

வாழ்க்கைத் துணையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வாகனப் பயணங்களால் மாற்றம் பிறக்கும். பதவியில் மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : சுபிட்சமான நாள்.
அனுஷம் : ஒற்றுமை மேலோங்கும்.
கேட்டை : உயர்வு உண்டாகும்.

*🔯தனுசு ராசி*

பொதுக்கூட்டப் பேச்சுக்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.
உத்திராடம் : கவலைகள் தோன்றும்.

*🔯மகரம் ராசி*

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் அறிமுகம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : அறிமுகம் உண்டாகும்.

*🔯கும்பம் ராசி*

குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : மனக்கசப்புகள் குறையும்.
சதயம் : மகிழ்ச்சி பிறக்கும்.
பூரட்டாதி : கவலைகள் நீங்கும்.

*🔯மீனம் ராசி*

பொதுநலப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மேன்மையான நாள்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.

Leave a Comment